Total Pageviews

Saturday, 17 August 2019

Abirami Anthathi 41 45





திருவடி தீட்சை திருவடி தீட்சை என்ற ஒன்று இருக்கிறது

அதை வழங்க வழங்குபவர்க்கு தகுதி வேண்டும்
அந்த தகுதி இறைவனுக்கும் ; அவரது அதிதேவர்களான சிவனுக்கும் ; நாராயணனுக்கும் மட்டுமே தகுதி உள்ளது
இதில் பூடகம் ; யோக ரகசியம் எதுவுமில்லை
பெரிய ரகசியம் இருப்பது போலவும் ; காணாததை கண்டுபிடிதத்து போல செத்துப்போன செல்வராஜைப்போன்ற மனிதர்கள் அலட்டிக்கொள்வார்கள்
திருவடி தீட்சை என்றால் பாதத்தை உச்சந்தலையில் வைத்து தீட்சை கொடுப்பதுதான்
மாணிக்க வாசகருக்கு சிவன் தன் பாதத்தை தலைமேல் வைத்து தீட்சை கொடுத்தார்
அடுத்த பிறவியில் வள்ளலாருக்கும் அதே போல சிவனடியார் போல வந்து எதிர்பாராத வேளையில் பாதத்தை தலை மேல் வைத்தார்
மகாபலி சக்ரவர்த்திக்கு திருவடி தீட்சை நாராயணர் நல்கினார்

புது பூங்குவளை போன்ற கண்ணியால் ; திருவடி தீட்சை நல்க தகுதி உடைய தன்
கணவரை அழைத்துக்கொண்டு வந்து தனது அடியார்கள் பலர் இருக்க எனக்கு தீட்சை
கொடுக்க வைத்தாளே ; என்னே நான் செய்த புண்ணியம்

என் அன்னை
இருக்கிறாளே அப்பனின் இடப்பாகத்தை அடைந்தவள் ; இணையானவள் ; அன்பின்
மிகுதியால் விம்மி அவனை ஆரத்தழுவி அவனாகவே ஆகிவிடுபவள் ; அவரின்
இதயத்திற்கு இதம் அளிப்பவள் ; தாமரை பொற்பாதம் ; பாசம் அங்குசம் போன்ற
ஐந்து வகை ஆயுதங்களை வாரமாக அடைந்தவள் ; தன் இனிய குரலாலும் சிந்துர
நிறத்தாலும் மூன்று உலகங்களிலும் இணையில்லாத பேரழகி இவள்

இவளால் அல்லவோ சங்கரனாரின் வீடு மங்கலமாக இருக்கிறது
அதுமட்டுமல்ல அவருக்கும் அன்னையாகவே மாறி சீராட்டுகிறவள்
ஆகவே மற்ற தேவர்கள் யாவருக்கும் அன்னை மேலானவள் அன்றோ
இவளை தேடினாலேயே போதும் எல்லா தேவர்களும் நமக்கு ஆசியே செய்வார்கள்
ஜகன்மாதாவான உணக்கு தொண்டு செய்கிறவர்கள் உலகையும் நேசித்து ஜீவகாருணியம் செய்வார்கள்
ஒருவேளை அல்லவை செய்தாலும் ; பொறுத்து ரட்சிப்பு செய்பவள் நீ

Abirami Anthathi 46-50





தம் அடியவர்கள் தவறு செய்தாலும் அதை பொறுப்பது பெரியவ்ர்களின் தகமை அன்றோ

யானும் தவறே செய்தாலும் அதை திருத்திக்கொள்ள முயற்சிப்பேன் என்ற நம்பிக்கையில் உன்னை விட்டு விலகமாட்டேன்
மனதாலும் கூட அழியட்டும் என்றோ ; பிறரால் அவமானப்பட்டட்டும் என்றோ எண்ணாமல் இருந்தால் உன்னால் நான் கைவிடப்பட்ட மாட்டேன்
புது நஞ்சை உண்டு தொண்டை கருத்தவனையே காத்தவள் அல்லவா நீ

சுடர்கின்ற அறிவாகி பிறை சந்திரனை சடையில் அணிந்தவனை ஒன்றி படர்கின்ற
பச்சை கொடியான உன்னை நெஞ்சில் பதித்து விட்டால் இதம் எப்போதும் இருப்பதால்
இடரலோ குருதியோ நோயோ பாதிப்பை உண்டாக்காது

வாழ்வின் துயரங்களால் உயிர் தடுமாறி மரணத்தை நெருங்கினாலும் உன் தோழிகளான அரம்பையர் சூழ வந்து அஞ்சேல் என்பாய்
நீயே நாயகி ; நான்முகி ;நாராயணி ;நளினி ; சாம்பவி ; சங்கரி ;சாமளை ; நாகேஸ்வரி ;மாலினி ; வாராகி ;சூலினி ; மாதங்கி
மதங்க முனிவரின் ஆசிரமத்தில் யாகத்தீயில் ஜனித்தவள் அவள்
ஜகத்தினில் ஜனித்த தேவர் இவள்
மற்ற தேவர்கள் பரத்திலே ஜனித்தார்கள்
அன்னை மட்டுமே ஜகத்தினில் ஜனித்ததால் ஜக ஜனனி
தன் வம்சத்தை ஆதி நாமமாக தரித்தவள்
மதங்கி ... மதங்கி .......மதங்கி என அழைத்தால் மிகுந்த பிரியப்படுவாள்

Abirami Anthathi 51-57





காசு பணம்தான் நமக்கு பாதுகாப்பு ; கோட்டை போல பலதலைமுறைக்கு சொத்து சேர்க்கவேண்டும் என இறைவனின் அருளை அறியாதவர்கள் நம்புகிறார்கள்

பணத்தாசையே மற்ற ஆசைகளையும் தூண்டி உலகில் பலவகையான கேடுகளை உருவாக்கிவிடுகிறது

அளவுக்குஅதிகமான ஆசைகளை தூண்டுபவை அசுர சக்திகளே ஆகும்

இந்த அசுர சக்திகளால் உண்டாகும் முரண்பாடுகளை அழிக்க சிவனும் நாராயணரும் முயற்சித்த போது நாராயணன் மோஹினியாக வியாபகம் செய்து அவரைப்பார்த்து அசுரர்கள் சிந்தை தடுமாறி நின்ற போது சிவன் அவர்களை அடக்கினார் என்பதாக ஒரு புராணம் உண்டு

மோஹினி அவதாரம் என்பது ஒரு குறிப்பு . அதாவது அதிதேவர் நாராயணன் தன்னில் ஒரு பகுதியை பெண்ணாக வியாபகப்படுத்தினார் .அவரே அதிதேவர் நாராயணி . அவரை சிவனுக்கு மனைவியாகவும் நமக்கு அன்னையாகவும் வழங்கினார்

அசுரர்களை கட்டுப்படுத்த மட்டுமல்ல நமக்கு அன்னையாக இருந்து வழிநடத்தவும் ; சிவன் பெரியவரா நாராயணன் பெரியவரா என மதச்சண்டை போடும் மனிதர்களுக்கு சிவன் கோவில்கள் அனைத்திலும் அன்னையாக நாராயணனின் ஒரு அம்சமே இருக்கிறது என சமரசத்தை உணர்த்தவுமே மோஹினி அவதாரமாகும்

இந்த நாயகியை சரணடைந்தால் மற்ற மூன்று அதிதேவர்களும் தானாகவே நமக்கு அருள்புரிவார்கள்

வையம் வரவுக்கு வழிசெய்வது ; துரகம் அது நல்வழியில் அளவோடு செலவாகவேண்டும் . செலவு குறைந்து மிச்சம் உண்டானால் மாமகுடம் வண்டி வாகனம் ஆபரணங்கள் எல்லாமே நீ நாடி தேடி ஓடவேண்டியதில்லை

நல்ல மதியை அருளும் சிவனாரின் திருமனையாலின் அடித்தாமரையை தியானம் தவம் செய்பவருக்கு தானாகவே வந்து சேரும்

அன்னையின் அழகிய உருவம் மீது லயிக்கும்போது அதுவே தவமாகவும் மாறிவிடுகிறது . மலார்ப்பாதங்கள் துவங்கி முழு உருவமும் மனதில் தங்கிவிடுகிறது

நித்தமும் தியானம் செய்துகொண்டிருந்தால் உலகத்தால் நம் மனதில் வந்து குவியும் மாசு மருக்கள் நீர்த்துபோய்க்கொண்டிருக்கும்

தியானத்தை நிருத்திவிட்டாலோ உலகம் நம்மை ஆழுமை செய்து அருள்வளம் நீர்த்துப்போகும்

பக்தன் சொல்கிறான் நித்தம் தியானம் செய்யாதவர்களிடத்து அன்னை வரமாட்டாளாம் . அவளின் பாதத்தை பிடித்துக்கொண்டாலோ இல்லாமை சொல்லி ஒருவரிடம் உதவி கேட்டு போகும் நிலை வரவே வராதாம்

பக்தன் இயல்பிலேயே கவித்திறன் உடையவன் . அவன் கோவிலும் அன்னையும் கதி என இருந்தானே தவிர தன் கவித்திறமையை அரசனிடம் காட்டி பரிசுகள் பெற முயலவில்லை

ஆனால் அப்படி பலர் இருந்தார்கள் . பசுந்தமிழ் பாமாலைகள் அரசனைப்பற்றி கொஞ்சம் மெய்யும் பொய்யும் இயம்பி பலர் காசு பார்த்துக்கொண்டுதான் இருந்தனர்

ஆனால் பக்தன் சொல்கிறான்

சிவனார் அளக்கிறபடி அண்டத்திற்கே படி அளக்கிறவள் நீயல்லவா

வரவு செலவு என்ற இரண்டு நாழிகளையும் நிர்வகித்து அறம் செய்கிறவள் நீயல்லவா

அப்புறம் எதுக்கு இந்த அரசனைப்பார்க்கனும்

ஆயிரம் மின்னல்கள் ஒரு மேனியானதைப்போல இலங்குகின்றாய் சிவனாரின்மனமகிழ்ச்சியாக இருக்கிறாய் வேதங்களின் துவக்கமும் நடுவும் முடிவுமானவள் ஆனந்தவல்லி உன்னை தியானிக்கும் ஆனந்தத்தை விட சாப்பாடு கூட வேண்டியதில்லை

படைப்பு துவங்கும்போது உண்டாகட்டும் என இறைவன் பேசினார்

வெட்டவெளியில் இறைவனின் ஆவி ஒரிடத்தில் குவிந்தது . அதுவே பிரபஞ்சமாக விரிந்தது

அதையே ஆதிசக்தி என்கிறார்கள்

பிரபஞ்சம் உருவாகும் முன்பே ஆதிசக்தி இறைவனிடமிருந்து வந்தாள்

ஒன்று ஆக அரும்பி பலவாக விரிந்து அவைகளையும் நீங்கி தனியாகவும் நிற்பவள் நீ என்கிறான் பக்தன்

இந்த அறிவு தனக்கும் மூத்தவள் என்ற தெளிவு ஆலிலையில் துயின்ற சிவனுக்கும் நன்கு தெரியும் . எனக்கும் தெரிந்ததால்தான் என் இதயத்தில் மனம் கோணாது நீ வருகிறாய்

பொருள் கோட்டையல்ல என ஆரம்பித்து அருளே கோட்டை என்கிறான் பக்தன்

Abirami Anthathi 58 -61



அன்னை வழிபாட்டில் பக்தன் குழந்தையாகிவிடுகிறான்
அவன் வர்ணிக்கையில் அங்கு ஆபாசம் வருவதில்லை
பிள்ளைக்கு செழுமையாக போதும் போதுமென்கிற அளவு தாய் பாலூட்டும் தருணம் பார்த்துக்கொண்டே இருப்பாளாம்
தருணாம்புயமுலை தையல் நல்லாள்
கொச்சைக்கண்ணர்களுக்கு மட்டுமே விரசமாகத்தெரியும்
நயன விழி என்பது கணவு கண்டு வாந்தியெடுக்கும் காதல்பித்து கவிஞர்களின் வார்த்தை
ஆனால் பக்தனுக்கோ கவ்ரவமான தகைசேர் நயனம் அதில் பிரவகித்து வருவதோ கருணை
இனக்கவர்ச்சி நெஞ்சத்தில் இருக்கும்வரை பெண்ணின் முகத்தை வஞ்சமில்லாமல் பார்க்க முடியாது

தப்பாக எடுத்துகொள்வார்களோ என பார்க்காதபோது பார்ப்பதும் பார்வை வருகிறதோ
ஏனும்போது மாற்றி பார்ப்பதுமாக கண்ணாமூச்சி விளையாட வேண்டியிருக்கிறது

ஆனால் அன்னையோ இளநகை பூத்தவளாக கருணையோடு பார்க்கிறாள்
ஆகவே அவள் வதணத்தை லயித்து பார்க்க முடிகிறது
அந்த மூக்குத்தி
மதுரைக்காரர்கள் வைரமூக்குத்தி வைரமூக்குத்தி என பெருமையாக பேசிக்கொள்வார்கள்
ஒரு தொங்கல் வேறு
காதிலே பப்படம்
இவ்வளவு வெயிட் போட்டால் காது தாங்குமா
காலையிலே பூஜையறையில் இந்த சந்தேகம் வந்து உற்றுப்பார்த்தால் அது கிரீடரத்திலிருந்தே வருகிறது
வதணாம்புயம்
தராம்புயம்
கேளுங்கள் கிடைக்கும்
சரணாம்புயம்
என் பாதத்தை சரணடைந்துவிடு
ஆறுதல் உண்டு தேற்றப்படுவாய்
இவ்வளவையும் ரசிக்கும்போது அவள் சிந்தனையில் இருக்கிறாள்
சித்தாம்புயத்தில் வீற்றிருக்கிறாள்
என் இளவயதில் குருநாதர் ஒருவர் பாக்காத பாக்காத பாக்க பாக்க கவர்ச்சியாக இருக்கும்
ஆனா ஒவ்வொரு பொம்பளயும் பிறவிபிறவியா வாங்கி வச்சுருக்கிற தோசமெல்லாம் உனக்குள்ள ஏறிரும் ஏன்பார்
பட்டினத்தார் பாட்டு கூட சளி மூக்கு கப்பு வாய் ஒய்யாரக்கொண்டை ஈரு பேணி ஏன்றெல்லாம் வாசிக்க சொல்லுவார்
அந்த தோஷத்தை அம்மாவின் அழகை ரசித்து ரசித்து போக்கிக்கொள்ள முடியும்
திரிபுரசுந்தரி யல்லவா
அழகை மெருகூட்டி யாரை மயக்கினாள்
அப்பன் சிவனையல்லவா
சிவன் சிறிதுகாலம் சடையாண்டியாக பித்துபிடித்து அலைந்தார்
தன்குறை தீர எங்கோன் தலைமேல் வைத்த தாமரையே என பாடல் உண்டு
கங்கையும் அன்னையே
அருணை என்பது சிவனின் ஜடாமுடி

அருணாம்புயத்தில் அமர்ந்துள்ள அன்னையை என் சித்தாம்புயத்தில் அமர்த்தினால்
பெண்களை உத்து உத்து பார்த்ததால் வந்தேறிய தோசங்களை போக்கிக்கொள்ள
முடியும்

ஆண்களே ஒரு நாளைக்கு பத்து பத்து பெண்களை உத்து உத்து
பார்தாலே போதும் பல குடும்பத்து பாராம்பரிய தோசங்கள் உங்கள் ஆத்மாவில் ஏறி
பத்து பத்து பிறவி பின்னோக்கி போய்விடுவீர்கள்

பிறகு ஏப்படி தவம் செய்து கிழிப்பீர்கள்
இதற்கு தீர்வுதான் என்ன

முள்ளை முள்ளால் எடுப்பதுபோல பத்து பத்து நிமிடம் அன்னையின் திவ்ய
முகத்தையும் உருவத்தையும் அலங்காரத்தையும் உள்வாங்கினால் அந்த தோசம்
கழிந்து அருள் ஆத்மாவில் நிறையும்

அப்படியே பெண்களால் பாதிக்கப்படாத அளவு ஆத்மசுத்தி உண்டாக உதவிசெய்யும்
இந்த தஞ்சம் தவிர்த்த தவநெறிகளால் ஆண்பெண் பேதத்தை கடறுவது முக்தி எளிதல்ல
அதிதேவர்கள் நால்வர் மிகமுக்கியமானவர்கள்
அருவமான பரம்பொருள் இறைவனின் அடுத்த நேரடியான வெளிப்பாடனவர்கள்
இந்த நால்வரில் அன்னையை அண்ணனான திருமால் தவிர அனைவரும் வணங்குவார்களாம்
மாலினும் தேவர் வணங்க நின்றவள்
சிவனுக்கு அவள் மனைவி ஆனாலும் சிவனுக்கும் அவள் மூத்தவள்
கறைகண்டனுக்கு மூத்தவளே என்றும்
மூவா முகுந்தர்க்கு இளையவளே

என்ற பாடல் வரிகள் உண்டு
கொன்றை வார் சடையில் உச்சியில் பிறையாக அவளே இருக்கிறாள்
சடையில் கங்கையாகவும் அவளே இருக்கிறாள்
கழுத்தில் நாகதேவியாகவும் அவளே இருக்கிறாள்
அட உடலிலே பாதி உடலாகவும் அவளே இருக்கிறாள்
விழுந்து விழுந்து காதலிப்பவள் ; உடல் முழுதும் ஆட்சி செய்பவள்
காமாட்சி
உன்னை உள்ளவண்ணம் அறியும் அறிவை தருவாயா

Abirami Anthathi 62- 65



சுயம் என்ற அகம்பாவம் உடைய அசுரர்களின் முப்புரம் என்ற கோட்டையை
தகர்த்தவரும் ; மதத்தால் சிவந்த கண்ணோடு கொல்ல வந்த யானையின் தோலை உரிந்து
ஆடையாக அணிந்துகொண்டவருமான சிவனை தங்கச்சிலை போன்ற தனது மேனி அழகாலும்
மலர்களும் கரும்பும் அணிந்து சிந்தையில் புகுந்து பகுதி இடம் பிடித்தவள்
அல்லவா

அவளின் சிந்தை என்னையும் அடிமையாக்கட்டும்
நான் தேறும்படி அவள் நிச்சயமாக ஏதுகள் காட்டுவாள்
ஆத்மாக்கள் முன்னேரும்படியா க குன்றில் இட்ட விளக்காக ஆறு சமயங்கள் உலகில் வழிகாட்டுகின்றன
இன்று உலகில் எவ்வளவோ மதங்கள் மார்க்கங்கள் இருக்கலாம் . ஆனால் அவைகளின் அடிப்படைகளை ஆறு மார்க்கங்களுக்குள் வகைப்படுத்தி விடலாம்
இந்த ஆறு மார்க்கங்களில் மிகச்சிறந்தது தலையாயது சாக்தம் என்பது இந்த பக்தனின் முடிவு
சக்தி வழிபாடு தனியாக இருந்தாலும் மற்ற எல்லா மார்க்கங்களிலும் அன்னை ஏதாவது ஒரு இடத்தில் இருப்பாள்
சிவனுக்கு மனைவியாக நாராயணனுக்கு தங்கையாக கிராம தெய்வங்களில் சப்த கண்ணியராக அவள் இல்லாத இடம் இல்லை
ஆகவே இந்த பக்தன் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு இவளை மட்டும் கும்பிட்டா பத்தாதா மற்ற தெய்வத்தை வீணர்கள் கும்பிடுகிறார்கள் என்கிறார்
பொதுவாக இலக்கியத்தில் உயர்த்தி பேசும் இடத்தில் இப்படித்தான் வரும் இதைத்தவிர எதையும் கும்பிட மாட்டேன் வீண் என்று

ஆனால் உடனே மனிதர்கள் எங்கள் தெய்வம் மட்டும்தான் தெய்வம் மற்றதெல்லாம்
கும்பிடக்கூடாது என அடுத்த மத தேவர்களை இகழ்கிறவர்களாக மாறிக்கொள்கிறார்கள்

மதமாச்சரியம் என்பது ஒரு அசுர குணம்
உன் தெய்வத்தை நீ அறிந்திருக்கிறாய் என்பதற்காக அடுத்த தேவர்களை காறித்துப்ப கூடாது
ஆனால் அடுத்த அடியில் ஒரு உண்மையை கூறுகிறார்
வீணே பலிகவர் தெய்வங்கள்பால் சென்று மிக்க அன்பு பூனேன்
இந்து தர்மத்தில் ஆரம்பத்தில் காய் கனிகளை யாகத்தில் சமர்பிக்கும் வழக்கமே இருந்தது
ஒரே ஒரு எலுமிச்சை கனியை சமர்பித்தால் ஆயிரம் ஆடுகளை பலியிட்டதற்கு சமம் என தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது

ஆனால் மனிதர்கள் தங்கள் சொந்த பந்தங்களை சும்மா அழைத்தால் வரமாட்டார்கள்
என்பதற்காக கோழி ஆடுகளை பலியிட்டு தாங்கள் விருந்துகொண்டாடுவதை
தெய்வத்திற்கு பலியிடுவதாக சொல்லிக்கொள்ள ஆரம்பித்தார்கள்

தங்கள் சுய அனுபவத்திற்காக பலியிடுதல் வீணானது
உன்னை புகழ்கின்ற சரணகதிகளுக்கு நிகரானவை உண்டோ
பூமியிலும் பாதாளத்திலும் விண்ணுலகிலும் சொர்க்கத்திலும் உன் திருமேனி பிரகாசத்தை விட மனம் கவருகிற எதுவுமில்லையே

ஈரேழு பதினாலு லோகத்திலும் உள்ளோர் விதிர்த்து நிற்கும்படியாக காம அம்பை
எய்த வந்தவனை சுட்டெரித்தவரான தவயோகியின் பாதி உடலை கைப்பற்றியவள் நீயல்லவா

மனிதர்கள் அனைவரிடத்தும் ஆறு நல்ல குணங்கள் ஆறு தீய குணங்கள் என 3 X 4 = 12 முகங்கள் அவ்வப்போது ஒன்று என வெளிக்காட்டும்
ஆனால் ஆறு நல்ல குணங்கள் மட்டும் உடைய மகனாக முருகனை மாற்றியது உன் வல்லபம் அல்லவா
தாயைப்போல பிள்ளை என்பார்கள்
முருகன் செம்மான் என்றால் தாய் நீயல்லவோ செம்மையான்வள் என்கிறான் பக்தன்

Abirami Anthathi 66 -69



வலிமைகள் நிறைந்தவன் அல்ல நான்
வரங்கள் அருளப்பட்டவனுமில்லை
ஆனால் உன்னை வழிபட்டதால் கிடைக்கும் பலன்களை சொத்தாக வைத்து வாழ்ந்துகொண்டிருக்கிறேன்

பாசுபதாஸ்திரம் உடைய வில்லாளியுடன் வீற்றிருப்பவளே நான் உன்னைப்பற்றி
பேசுகிற வார்த்தைகள் அறியாமையால் உனக்கே விரோதமாக போனால் கூட நின் திருநாம
ஜெபம் செய்வதால் என்னை காத்துவிடுவாயல்லவா

உன் நாமங்களை தோத்திரம் செய்து தொழுது மின்னலைப்போன்ற நின் தோற்றத்தை ஒரு நொடிப்பொழுது தியானத்தில் போதுமே
அவ்வாறு செய்யதவர்களோ வலிமை, குலம்,
கோத்திரம், கல்வி, குணம், குன்றி, நாளும் மெலிந்து வீடுகள் தோறும் பிச்சை கேட்கிற பலிக்கும் ஆளாகிரார்களே


பஞ்ச பூதங்களும் ஆறு அறிவுகளும் ஒன்றாக பொதிந்துள்ள சிவகாம சுந்தரியின்
பாதங்களை சரணடைந்த தவம் உடையோரை சகல செல்வங்களும் தானாக தேடி வரும் அல்லவோ

தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா
மனம் தரும், தெய்வ வடிவும் தரும்,; இதுவெல்லாம் வந்தாலும் வஞ்சகம் இல்லாத நண்பர்களை உறவினர்களை சுற்றத்தினரை அடைவது அவ்வளவு எளிதா

சகலரையும் ஏதோ ஒருவகையில் சாந்தம் சமாதனப்படுத்தும் மோகனம் யாரிடம் உள்ளது
யாரலும் அடக்க முடியாத அசுரர்களை மோஹினியாக அன்னை வந்து தன் இயல்பால் விக்கித்து நிற்க வைத்தாவள் அல்லவா
அந்த தருணம் பார்த்து அல்லவோ சிவனும் அவர்களை போட்டுத்தள்ளினார்

வில்லவருடன் வீற்று இருப்பவள் அல்லவோ என பக்தன் பாடும்போது அவளுக்கு
பாதுகாப்பாக சிவன் இருக்கிறார் என்பதுபோல வாசகம் வந்தாலும் அந்த வில்லாலும்
பயனற்ற நிலை வந்தபோது அன்னையல்லவோ தந்திரம் செய்து வில்லுக்கே வெற்றி
தேடித்தந்தவள்

வெற்றிக்கே வெற்றி கொடுத்தவள் என பாராட்டி மகிழ்கிறான் பக்தன்

Abirami anthathi 70 - 73



புண்ணியம் நிரம்பிய தாமரையில் குடியிருக்கும் பேரழகே நினது அகண்டகோடி
பிரகாசத்தை தரிசித்து அருள் பெற்ற நான் உன் கால் தூசிக்கு கூட தகுதியில்லாத
பெண்களைப்பார்த்தா மயங்குவேன்

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி
அண்ணையின் அழகை தரிசித்தால் ஒழிய பார்க்கும் பெண்களை ஆ அழகா என வெறிக்கும் கண்கள் மாறாது

மாசுமருவில்லாத அழகான கோமளயாமளை யின் அன்பையும் அருளையும் உள்வாங்கி
விட்டாலோ பார்க்கிற பெண்களிடமெல்லாம் அது குறை இது குறை என்பது போல குறை
தெரிய ஆரம்பிக்கும் நாம் பார்க்கிற பெண்களிடமெல்லாம் அன்னையின் எதோ சில
அம்சங்கள் இருக்குமே தவிர முழு நிறைவு இருக்காது பல குறைகள் தெரிய
ஆரம்பிக்கும்

நானும் கூட சிறுவயதில் இருந்தே இவ்விசயத்தில் எவ்வளவோ
மல்லுக்கட்டிக்கொண்டேதான் இருந்திருக்கிறேன் . அறிவும் அறிவுறுத்தலும்
வைராக்கியமும் கொஞ்ச நாள் நிலைக்கும் , பிறகு எதோ ஒரு சாக்கில்
பிட்டுக்கொள்ளும் .

999 பாடல்களை பக்தி மனம் கமழ அம்பிகாவதி
பாடினாரே அது அவ்வளவு எளிதான காரியமா ? அவ்வளவு மனதை வசப்படுத்தி பாடிய
அவரால் அமராவதியை பார்த்த உடன் காதல் பாடல் பொத்துக்கொண்டு வந்துவிட்டது
காமம் அவ்வளவு வலியது

வழுக்கி வழுக்கி விழுந்துகொண்டும்
பிரார்தித்துக்கொண்டும் இவ்விசயம் ஓடிக்கொண்டு இருந்தது . இறைவனின் கிருபை
அருளால் அன்றி இம்மாயையை வெல்வது இயலாத காரியம் என மனதை தேற்றிக்கொள்வேன்


ஆனால் அதிதேவர் நாராயணியின் மீது பக்தி அதிகரித்ததும் அவரை
அறிந்துகொள்ளவும் உணர்ந்துகொள்ளவும் தொடங்கிய பிறகு அவரில் தியானிக்க
தொடங்கிய பிறகும் என்னை அறியாமல் பார்க்கும் பெண்களிடம் எல்லாம் இது குறை
அது குறை என்பதுபோல எண்ணம் வர ஆரம்பித்தது

பெண்கள் வாழ்வில் படும்
அல்லல்கள் குடும்பம் உய்ய அவர்கள் செய்யும் தியாகங்கள் ; தன் குடும்பத்தின்
கெளரவம் கருதியே அவர்கள் தங்களை அழகு படுத்திக்கொண்டு வெளியே
நடமாடுகிறார்களே தவிர அந்த அழகால் எந்த பயனும் அவர்களுக்கு கிடைப்பதுமில்லை
. என்பதாக எண்ணம் வரத்தொடங்கியது .

எத்தனை பிறவிகள் நானே பெண்ணாக
இருந்திருப்பேன் . ஆணாக பிறந்து பெண்ணை இச்சித்து இச்சித்து வாழ்வதும்
பதிலுக்கு பெண்ணாக பிறந்து ஆண்களிடம் காத்துக்கொள்ள அனுதினமும் பயந்து
பயந்து வாழ்வதுமாக ஆத்மா அல்லாடிக்கொண்டுள்ளது

ஆணும் பெண்ணும் எனக்குள்ளேயே அடக்கம் . நானே என்னை ஏமாற்றிக்கொண்டே அலைகிறேன்
எனக்குள் அடக்கம் என்ற நிறைவு உணரப்படாதபோதே ஆண்பெண் பேதங்கள் இச்சையை தூண்டுகிறது
பலமுறை பூமியில் ஆணாகவும் பெண்ணாகவும் நானே பிறந்திருக்கிறேன் என்பதை உணராமல் பெண்ணிச்சையை கடர முடியாது
தனக்குள்ளேயே ஆணும்பெண்ணும் அடக்கம் என்ற ஞானத்தால் சிவன் காமத்தை சுட்டெரித்தார் ஆகவே சிவனை பெம்மான் என்பார்கள்
அந்த சிவனே அன்றலர்ந்த தாமரை போன்ற அன்னை நாராயணியை தன் தலையில் வைத்தபிறகுதான் அவரது குறையே தீர்ந்ததாம்

சகல செளபாக்கியங்களையும் அலங்கரித்தவளாக அன்னை அமர்ந்திருக்கிறாள் அவரை
வைரவரே போற்றி புகழ்ந்துகொண்டுருக்கிறார் ; ஆனாலும் அன்னை தன்
பிள்ளைகளுக்கென்று சேமம் தர தனது திருவடியை செம்மையான கைகள் நான்கை
ஒதுக்கிவைத்துள்ளாராம்

அவரின் சரீரம் ஒளியாக பிரகாசிக்கிறது .
மூன்று மாயைகளையும் அழிப்பேன் என்பதாக அவளது நாமம் திரிபுரை எனப்படுகிறது
ஞானக்கண்ணோடு பிரகாசிக்கிறாள்

Abirami Anthathi 74 -77



அன்னையின் அடியினை யாரெல்லாம் கவணித்துக்கொண்டே இருப்பார்களாம் ?
நயனங்கள் மூன்று உள்ள சிவன் ; நாராயணன் ; பிரம்மா
மேலும் யார் இந்த வேதம்
யோக அப்பியாசம் தவம் தியானம் விசாரம் ஞானம் ; இவைகள் அனைத்திற்கும் சற்குருவாக ஒருவர் உள்ளார்
அவர் அதிதேவர் ஆதிசேஷன்
விசாரம் எனற ஒன்று ஆதிசேஷன் கிருபையில்லாமல் நடக்காது
சேஷம் கொடுப்பது என பிறந்த குழந்தைக்கு குடும்ப பெரியவர்கள் முதல்முதலாக கொடுப்பார்கள்
அந்த குழந்தைக்கு சேஷம் கொடுத்தவர்களால் குடும்ப பாராம்பரிய உணர்வுகள் தூண்டிவிடப்படும்
சேஷம் என்றால் தூண்டி விடுதல்
வெட்டவெளியில் ஆதியில் இயக்கத்தை தூண்டி விட்டவர் சாட்சாத் ஆதிசேஷனாவார்
அவர் நாராயணனில் ஒரு அங்கம் என்றாலும் தனித்தும் செயல்படுவார்
யார் சித்தி முழுமை தேவத்துவம் அடைந்தார்களோ அவர்கள் அனைவரும் ஆதிசேஷனின் அங்கீகாரத்தை பெறுவார்கள்
சூசகமாக தலையில் ஆதிசேஷனை போட்டிருப்பார்கள்
ஆதிசேசனுக்கு இரண்டு அம்சம் உண்டு
கார்க்கோடன் - விநாயகர் - துவக்குபவர்

செங்கோடன் - முருகன் - ஞான சற்குரு - நிறைவை அருளுபவர் - உள்ளும்
புறம்பும் தீய இயல்புகள் அசுரர்களுடன் யுத்தத்தை நடத்தி நமக்கு ஞானம்
அருளுபவர்

நாம் எந்த குருகுலத்தில் இருந்தாலும் முருகனது அருளைப்பெற வேண்டும்
ஆனால் இந்த நால்வரும் அன்னையின் பாதங்கள் எப்பக்கமாக செல்லுகிறது என கண்காணித்துக்கொண்டே இருப்பார்களாம் என்கிறான் பக்தன்
அந்த அடியோடு இணைந்துள்ள சிந்தனை நமக்கும் வந்தால் சகலதேவர்களின் அருளும் ஆசியும் அறிமுகமும் கிடைத்துவிடும்
அதுவே ராஜயோகம் சித்திப்பதன் திறவுகோல்
ராஜயோகம் கொஞ்சம் வாடை அடித்தாலே போதும் கார்ப்பரேட் சாமியார்களாக வலம்வரத்தொடங்கி விடுவார்கள்
அங்கே பொன்னும் பெண்ணும் குவிந்து பலர் வழுக்கி விடுவதும் உண்டு
அன்னையின் மீதான பக்தி சரணாகதம் இருந்தால் வழுக்காமல் தப்பலாம்
பொன்னும் பெண்ணும் பாதிக்காத நிலையை அடைந்த யோகிகள் மீது இவைகள் நெருக்கமாவதை தவிர்க்கவும் இயலாது
கற்பக விருட்சம் ; காமதேனு பசு அன்னையால் தன் பிள்ளைகளுக்கென்று உருவாக்கப்பட்டது
பரமாத்மாவான மாலை அடையும் வரை உன்னை பிடித்து கீழே இழுப்பார் இல்லாமல் வலுவான பிறவித்தொடரை கடந்து செல்லலாம்
மால்வரையுமான ஈரேழு பதினாலு லோகங்களையும் படைத்தபோது இவள் அதில் பங்கு பெற்றிருந்தாள்
ஆகவே இவளது திருமேனியில் லயித்தவர்களால் பரமாத்மாவை எட்டமுடியும்

வண்டு கிண்டி அவிழும் கொன்றை மலர்களை அணிந்துள்ள ஜடா முடியில் கங்கையை
அணிந்துள்ளவரான சிவனாரின் பகுதி உடம்பை பறித்து அதில் குடிபுகுந்துள்ள உன்
திறத்தை கண்டு வியந்துநிற்கிறேன்

Abirami Anthathi 78 -81



பக்தன் தன் அன்னையின் மீது லயித்து விட்டானானால் அவளின் அழகு அவனுக்கு பெருமையாக தெரிய ஆரம்பித்து விடுகிறது
சமயத்தில் அவளும் ரம்மியத்திற்குள் அவனை ஆழ்த்தி மனதை இதமடைய செய்வாள்
இறை பேரானந்தம் என்று சொல்வார்களே அந்த பரமானந்தம் நிர்விகழ்பமானது
அதை சிறிதேனும் அனுபவித்தவர்க்கு அதற்கான சலிப்பிலாத சாதகம் செய்யத்தோன்றும்
பரமானந்த சாகரம்
அதில் பல நிலைகள் உள்ளன
அவற்றில் ஒன்று அன்னையின் அழகில் லயித்திருப்பது
மோகனம் என்பது மோகத்தில் காமத்தை நீக்கிவிட்டால் வரும் நிலை
காமம் அற்ற மோகம் மோகனம்
செளந்திர்ய லகரி
ஆதிசங்கரர் சுத்த சந்நியாசி
அதுவும் பாலவயதிலேயே சந்நியாசம்
ஒரு பத்து வருடத்திற்குள் இந்தியா முழுதும் கால்நடையாகவே அலைந்து பல சாதனை செய்தவருக்கு நேரம் ஏது
அவரையும் அன்னை தன மோகனத்தில் வீழ்த்தி அவர் வாயாலும் தன் செளந்திர்யத்தை பாட செய்து ரசித்து கேட்டாள்
அதுபோன்ற ஒரு நிலையில் பயித்தியம் போல தியானத்தில் ஆழ்ந்து மோகனத்தில் மூழ்கி கிடந்தவர் அபிராமி பட்டரும்
அம்மாவாசையை பெளர்ணமி என சொல்லியாயிற்று ; நிலவு வராவிட்டால் மரண தண்டனை நிச்சயம்
தப்பி ஓடவா செய்தான் பக்தன்
அவன் சரணாகதி அடைந்து எவளின் மோகனத்தில் லயித்து பரமானந்தம் அடிந்திருந்தானோ அவளையே அவன் பற்றிக்கொண்டான்
மரணபயம் என்பது கிஞ்சித்தும் இல்லை
அந்தாதி என்பது மிகவும் சிக்கலான இலக்கணம் உடையது
முடித்த அடியையே முதலடியாக எடுக்கவேண்டும்
அதில் பொருள் கோர்வையும் வேண்டும்
சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்
புள்ளும் பரிமள பூங்கொடியே

என ஒரு இடத்தில் வருணனை கூட உண்டு
புள்ளுதல் என்ற வார்த்தை கோதை அக்கா வும் பயன்படுத்திள்ளார்
புள்ளும் சிலம்பினகால்
குழந்தைக்கு சிலம்பை கொலுசை மாட்டிவிட்டு அது தட்டுத்தடுமாறி ஓடி அந்த சத்தத்தை கேட்டு பேரானந்தம் அடைவார்கள்
இதயத்தின் அடி ஆழம் வரை மகிழ்ச்சியை நிரப்புவது புள்ளும் சிலம்பு
சொற்சுவை பொருள் சுவையோடு நாட்டியம் ஆடும் சிவனாரோடு ஒத்திசைந்து பின்னிப்பிணைந்து பரிமளத்தை அள்ளிக்கொடுப்பவள் இவள்
அந்த அழகில் லயித்து பரமானந்த சாகரத்தில் திலைக்கவைத்தவள் என்னை காக்காமல் விடுவாளா என்ன
அதனால் அவன் சொல்கிறான் எனக்கு துணையாக உன் அழகையே எழுதிவைத்தேன்
கண்ணழகு கண்ணழகு என காதல்வாந்தி கலைஞர்களும் பாடாத இடமில்லை
கண்ணகி கண்ணாத்தாள்
சுட்டும் விழி சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடி

பாரதி கொண்டாடிய அதே அர்த்தத்தில் இந்த பக்தனும் சொல்கிறான்
விழியின் கொழுங்கடையும்,
துப்பும், நிலவும் எழுதிவைத்தேன், என் துணை விழிக்கே.

அபிராம வல்லியின் விழிகே அருளுண்டு என்கிறான்
கடைக்கண்ணால் அவள் ஒரே ஒரு பார்வை பார்த்தால் போதாதா
கருணை ஈகை அருள்பாலிப்பு
அவளின் அருள்பாலிப்பாள் வேதங்கள் உணர்ந்து அதன் வழி வாழும் இதயம் வந்துவிடும்
சகல செளபாக்கியங்களும் தேடி வரும்
அப்படியிருக்க உலக வாழ்க்கை உலக வாழ்க்கை என பழிக்கே உழலும் மனிதர்களின் தயவு எனக்கு அவசியமில்லை
தனித்திரு விழித்திரு என்பது இறைவனோடும் இறைவனது பரமண்டல சக்திகளோடு கூட்டை உறவை நிலைநாட்டிக்கொண்டவர்க்கு மட்டுமே வருவது
அவனுக்கு ஒத்தாசை பரத்திளிருந்தே வரும்
உலகம் வேண்டுமானால் அவனை கண்டுணர்ந்து அவன் பின்னால் ஓடினால் பயனடையும்
அவனுக்கு உலகம் அவசியமில்லை
தன் அடியாரிடம் கூறி அவளே கூட்டத்தையும் உண்டாக்கித்தருவாள்
கொடிய வினைகளையும் களைந்து பிறவித்தளையையும் அறுத்தெறிவாள்
கண்ணால் காணும் பாக்கியத்தை அருளுவாள்
தன்னை உள்ளது உள்ளவாறு தெளிவாக அறியத்தருவாள்
சப்த மாதர்கள் வேறு சப்த கன்னியர் வேறு என்பதை 50 வயது கடந்துதான் அறிந்தேன்
கெளரி சப்தமாதர்களின் தலைவி என்றால் காளி சப்தகண்ணியரின் தலைவி
அபிராமி காமாட்சி மீனாட்சி என்பவர்களெல்லாம் காளியே என்பதை சிலமாதங்கள் முன்புதான் உணர்ந்தேன்

அகோரமான காளியே மகா சிருங்காரியாகவும் ஆரணங்காகவும் மாறி சிவனை மயக்கி
அடக்கி வைத்து கலியுக வாழ்வும் நடக்கும்படியாக அருளாட்சி செய்து வருகிறாள்

மாத்தவள்
மாத்தவள் என்பதைப்பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்
உலகின் சொப்பன சுந்தரிகள் யார் இருந்தாலும் அவர்கள் அன்னையின் பரிவாரங்கள் ஆகும்
வேலைக்காரிகள் ஆகும்
எஜமானியே எனக்கு வேண்டியவாளன பிறகு இந்த வேலைகாரிகளை நான் என்ன மதிப்பது
ஆ ஆ அழகு என ஆராதிப்பது
மாசு மருவில்லாத அழகு என்றால் அன்னை ஒருத்தி மட்டுமே
மற்றெல்லா அணங்குகளிடமும் நிச்சயமாக ஒரு சின்ன சொள்ளை இருக்கும்
ஆனால் நிறைவான அழகு அடக்கமாக பரிமளிக்கும் . தாய்மையே வடிவான அத்தகு பெண்கள் உன் அருள் பெற்றவர்கள்
குறைகளோ கூத்தாடும்
அலப்பறை செய்யும்
அந்த அலப்பறை ஒரு மாயை வஞ்சகம்
அதற்கு நான் இணங்கேன்
அவர்களால் பாதிக்கப்படாத இயல்பு ; என் கண்கள் உன்னை தரிசித்ததால் உண்டானது

Abirami Anthathi 82 -85



அருள் விரியும் கமலத்தில் ஆரணங்காக மனம் வீசுகிறவள் நீ
அகிலம் முழுவதும் உன் திருமேனியின் ஒளி பிரகாசிக்கிறது
அதைக்கண்டு வியந்து எனக்கோ பேரானந்தம் களிப்பு உண்டாகிறது
அந்தக்கரணங்களும் விம்மி விம்மி மெய்மறக்கிறது
உன்னில் மெய்மறந்து கரைபுரண்டு வெளியாகும்போது உலகுக்கு பயித்தியமாக நான் தோன்றி விடுகிறேன்
அதை தவிர்க்க முயற்சித்தும் முடியாதபடி உன் ஆகர்சனம் ஆக்கிரமித்து விடுகிறது

மனம் கமழும் புது மலர்களை உன் பாதத்தில் சமர்பித்து இரவும் பகலும் உன்னை
துதிக்கிரவர்கள் வின்னோர்களால் புகழப்படும் அந்தஸ்தை அடைவார்கள்

தவப்பேறால் அடியார் கூட்டமும் சித்துக்களும் ராஜயோகமும் கைகூடும்
ஐராவதத்தை அடையும் இந்திரபதவி சித்திக்கும்
ஆண் பெண் பேதத்தை கடந்தவரான பெம்மான் சிவனின் இடபாகத்தை உடையவள் நீ
ஒடிந்து விடுமோ என எண்ணத்தக்க இடையில் தரமான செம்பட்டை ஆடையாக உடுப்பவள் நீ
ஒளிரும் மதியை உடைய செஞ்சடை உனக்கும் உண்டு
ஆனால் வஞ்சகர் நெஞ்சை அறவே வெறுப்பவள் நீ
நிச்சயமாக பிறவித்தொடர் என்ற பந்தத்தில் இருந்து என்னை காத்தும் விடுவாய்
அத்தகு புண்ணியத்தை இக்கவியை கேட்போர் படிப்போர் உணர்வோர் அனைவரும் உண்டாகட்டும்
உன் பாசத்தால் கட்டுப்படுத்தி நல்வழிப்படுத்துகிறாய்
உன் கையில் உள்ள பாசாங்குசம்

வண்டுகளை மயக்கும் தேன்மலர்களைப்போன்ற ஐம்புலன்களால் ஆன உன் திருமேனி ;
சிற்றிடை ; குங்குமம் வார்க்கும் முலையும் அதன் மேல் தவழும் முத்து
மாலையும் கரும்பும் நான் பார்க்கும் திசையெல்லாம் இருப்பதுபோல இருக்கிறது

அங்கெங்கெல்லாம் இருந்து உன் அழகிய கண்களால் என்னை பார்த்து பார்த்து என் அல்லலகளை எல்லாம் களைந்துகொண்டே இருக்கிறாயே
எனக்கென்ன கவலை ?

Abirami Anthathi 86-89



கர்மத்தொடர் இரண்டு நம்மை ஆளுமை செய்யும்
பிதுரார்தித கர்மம்
சஞ்சித கர்மம்
நம் முற்பிறவியில் நாம் சேர்த்துவைத்துள்ள கர்மம் பிதுரார்ஜிதம்
அதற்கு ஒத்த குடும்பத்தில் நாம் வந்து பிறக்கிறோம்
இப்போதோ நம் கர்மம் மட்டுமல்ல இந்த குடுமபத்தின் முன்னோர்களின் பாவங்களும் சேர்ந்து நம் ஆத்மாவில் ஏறிக்கொள்கிறது
அது நம்மை வழிநடத்தும்

அதன் வழியிலும் அதோடு மல்லுக்கு நின்றுகொண்டும் இப்பிறவியில் புதிதாக நாம்
சேர்க்கும் பாவ புண்ணியங்களும் சேர்ந்து இப்பிறவியில் நாம் மரணத்தை
தழுவும்படியாக கண்டங்கள் பல உண்டாவதுண்டு

அந்தக்கண்டமே வெங்காலன் வேல் விடும் நேரமாகும்
அந்த வேல் என்பது அந்த ரெண்டு கர்மத்தால் உண்டானது
கவிதைக்கு அழகு என்பது இவ்வளவு வார்த்தைகளால் சொல்ல வேண்டிய அர்த்தத்தை ரெண்டே வார்த்தையில் அடக்கி விடுவது
கப்பு - பழையது
கதிப்பது - இப்போது செய்வது
இப்போ பக்தன் என்ன சொல்கிறான் ; தன் அதிதேவர் அன்னை எப்படிப்பட்டவள் என்கிறான்

திருமாலும் பிரம்மாவும் ஆதிசேஷனும் அடி முடி தேடியும் காணமுடியாதவரான
அதிதேவர் சிவனின் சூலம் ஏந்திய கையும் அந்த பக்கத்து காலும் யாருடையதாம்

அவளுடையதாம்
அதனால் வெங்காலனை பார்த்து ஏய் நில்லு நில்லு என்பாளாம் அன்னை
அந்த வார்த்தை அழிவின் அதிபதியான சிவனாரின் பாதியாளின் வார்த்தையல்லவா
காலன் கேட்டுத்தானே ஆகவேண்டும்
அன்னைக்கு ஏதாவது ஒரு வகையில் ஒவ்வொருவரோடு உறவு இருக்கும்
காளியின் தங்கையான திரெளபதி எமனின் மகனான தர்ம ராஜரின் மனைவியல்லவா
பிறகு அந்தக்குரலுக்கு மரியாதை இல்லாமலா இருக்கும்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழி என்கிறான் பக்தன்
வார்த்தையாலும் உணர்வாலும் புரிந்துகொள்ள முடியாதவளே
என் பாதைக்கும் அதனால் உண்டாகும் கர்மாவுக்கும் நீ காவலாக இருக்கிறாய்
கலியுக வாழ்வில் நான் பல தவறுகள் செய்கிரவனாகவே இருக்கிறேன்
மன்மதனை விழியாலேயே சுட்டெரித்து அழிவற்றவர் என நிரூபித்த சிவனாரின் பாதி உடம்பை கைப்பற்றி கலியுகத்தை காத்துக்கொள்கிறவள் நீயல்லவா
என் குறைகளை காப்பாய்
அக்கிரமம் மிகுந்த அசுரர்களின் முப்புரத்தை எரிக்க சிவனார் வில்லை எடுத்தபோதும் அவரின் உக்கிரத்தை குறைத்தவள் அல்லவா
பிரம்மாவும் சிவனாரின் தண்டனைக்கு ஆளான போது ஒரே ஒரு சிரத்தை கொய்ததொடு தடுத்து நிறுத்தியவளும் நீயல்லவா
பரம் என்று உன்னை சரணடைந்து விட்டேன்
என்னை தரம் அற்றவன் என்று தள்ளிவிடாதே
நான் பலமுறை சொல்லிக்கொண்டுள்ளேன்

பக்தி என்றவுடன் ஒண்ணாங்கிளாஸ் ஹீ ஹீ என்று ஒதுக்குகிற ஞானமார்க்க
சிறுபிள்ளைகளுக்கு நான் சொல்வது அந்த ஞானத்தில் போதிய அளவு வளராததால்தான்
இப்படி ஒரு எண்ணம் உங்களுக்கு வருகிறது

ஒரு குறிப்பிட்ட அளவு
வளர்ந்தீர்களானால் எவ்வளவு அறிவும் ஞானமும் ஒன்றுக்கும் ஆகாது ; அதுவும்
அஹம்பாவம் என்னும் மாயை ; இறைவனையும் அவரது தேவ மனடலத்தாரையும்
சரணடைந்தாலன்றி இனி முன்னேற்றமே இல்லை என்கிற தாழ்மைக்கு வந்தடைவீர்கள்

ஞானம் முற்றியபிறகு வரும் பக்தி பக்தியோகம் ஆகும்
அவன் ஏற்கனவே நீங்க சொல்கிற குண்டலினியை ஏத்துறது இறக்கிறது எல்லாம் அத்துப்படியாணவனே
இந்த பக்தன் யோகஅப்பியாசத்தில் கைதேர்ந்தவன் என்பது வரும் வார்த்தைகளில் விளங்கும்
உடம்பை விட்டு உயிர் வெளியேறிய பிறகு ஆத்மாவுக்கு உணர்வு இருக்கும் ; ஆனால் செயல்படக்கூடிய அறிவு இருக்காது
சும்மா ஒரு பார்வையளனைப்போல உணரும் அவ்வளவே
அறிவு செயல் அற்ற மரணம் நிகழும்போது என்ன நடக்குமாம்
துரியம் அற்ற உறக்கம் வந்து விடுமாம்
அப்படியானால் துரியம் உள்ள உறக்கம் என ஒன்று இருக்கவேண்டுமல்லவா ?
இருக்கிறது இருக்கிறது
ஜீவசமாதி ஜீவசமாதி என கத்துக்குட்டிகள் தேடி அலைகிறார்களே அதுதான்
துரியம் என்கிற இடத்தில் ஒரு பெட்டகம் போல முக்கோணம் போல உள்ளது
அதற்குள்ளாக உயிரை செலுத்தி பூட்டி விட்டால் உயிர் அந்த பெட்டகத்தை விட்டு வெளியேறாது
அதுதான் துரியம் உள்ள உறக்கம்
உடலை விட்டு உயிர் பிரியாது
அந்த உடல் செயல்பாடுகளை நிறுத்திவிடும்
ஆனால் அழுகாது
தரையில் கிடந்தாலும் அப்படியே இருக்கும்
கைகால் உறையாது துவளும்
தண்ணீர் வாயில் விட்டால் உள் இறங்கும்
இவையெல்லாம் இன்றும் மேய்வழிச்சாலையில் ஜீவ ஒடுக்கம் அடைகிரவர்களை போய் பாருங்கள் சாட்சியாக அரங்கேறிக்கொண்டுள்ளது
ஆனால் இவையெல்லாம் சுய பயிற்சியினால் சித்தர்கள் பலர் அடைந்தார்கள்
பக்தி யோகிக்கு அவரவர் அதிதேவர்கள் வந்து சேவடியை சென்னியில் வைக்கிற திருவடி தீட்சை வழங்க வேண்டும்
வள்ளலார் சிவனால் திருவடி தீட்சை அனுபவம் பெற்ற பிறகே அருட்பெருஞ்சோதி என அருவ இறைவழிபாட்டுக்கு மாறினார்
பூமியில் பல ஞானிகள் ஜீவசமாதி இருந்தபிறகும் ; அந்த பலமும் நீங்கி மறுபடி பிறக்கிறார்கள்
ஜீவசமாதி நிரந்தரமானதல்ல
அது தற்காலிக நிம்மதி
பிறவி எடுக்காமல் சிலகாலம் தவிர்க்கலாம்
கலியுக முடிவு வரை மீண்டும் மீண்டும் பிறந்து அல்லல் படாமல் தவிர்த்துவிட்டால் சத்திய யுகத்தில் உயிர்த்தெழ வைக்கப்படுவோம்
அவ்வாறு உயிர்த்தெழ செய்வதற்கென்றே ஒருவர் வர உள்ளார்
வள்ளலார் சத்திய ஞான சபையில் எழுவார் மேடை ஒன்றை கட்டிவைத்துள்ளார்
கிறிஸ்தவம் இசுலாம் எல்லாவற்றிலும் வரப்போகிறவரைப்பற்றி முன் அறிவிப்புகள் உள்ளன
அவரே என்னால் முன்னறிவிக்கப்படுகிற சமரச வேதாந்தி
அல்மஹதி
அவர் அதிதேவர் நாராயணியின் அருள் குமாரனுமாவார்
திரெளபதியின் மனம் கவர்ந்த கணவனும் ஆவார்

Abirami Anthathi 90-95





நம்
மனத்தாமரையில் அன்னை வந்து நிரந்தரமாக குடியிருந்துவிட்டால் ஆன்ம
வாழ்விலும் சரி உலக வாழ்விலும் சரி ஒவ்வொன்றாக எல்லா மேன்மைகளும்
சித்திக்கும்
சிவனார் சிறந்த கலைஞன் கவிஞரும் கூட
முதல் தமிழ்சங்க புலவரான அவர் இன்று பரலோகத்தில் ருத்ர பதவியில் அதிதேவராக உள்ளார்
விண்ணிலுள்ள அந்த புலவனுக்கு விருந்து கொடுப்பவள் அதுவும் மருந்துகளையே விருந்தாகவும் தருகிராளாம் அன்னை
மின்னலைப்போன்ற மெல்லிய இடையை உடையவள் சிவனுக்கு மகிழ்வை கொடுத்து உத்வேகமாக இருக்கும் பொற்சிலை அவள்

அவளை நாளும் புகழும் வேதங்கள் காட்டிய வழியில் தொழுது வரும்
அடியவர்களைபின்பற்றும் சீடர்களுக்கு சகல மேன்மைகளும் உண்டாகி பரலோக
வாழ்வும் சித்திக்கும்
ஆன்ம சித்திகளே அழியாத சொத்து பதம்
அதில் ருஷி கண்டு அன்னையின் பாதத்தை பற்றி அவளின் வழியிலே வாழ சற்குருவாக வந்து அடிமை கொள்பவள் அவள்
உன்னதத்திலிருந்து வரும் சற்குநாதர்களை உணர்ந்து அடைந்த ஒரு சாதகனுக்கு மனித குருமார்கள் அவசியமில்லை
மனித குருமார்களிடம் குறை இல்லாமல் இருக்காது
அவர்கள் எங்களைப்போல உண்டுமா என பெருமை பேசி நம்மை மூடர்களாக மாற்றி ஆள் பிடிப்பதிலேயே இருப்பார்கள்
கடவுளுக்கு அடுத்த படியில் இருப்பவர்கள் நான்கு அதிதேவர்கள்
இதில் மற்ற மூன்று அதிதேவர்களும் முகிழ்நகையான அன்னையை போற்றுவார்களாம் இணக்கமாக நடந்துகொள்வார்களாம்
ஆகவே அன்னையின் தயவை பெற்றால் தானாகவே மற்ற மூன்று அதிதேவர்களின் தயவும் நமக்கு கிடைத்துவிடும்
இந்த தகுதி புவனேஸ்வரியான அன்னைக்கு தாய்மை என்ற சிறப்பால் உண்டானது
மேகங்கள் மலை முகடுகளில் கொஞ்சி வழிவதுபோனற அருள்பிரவாகம் அவளது தாய்மையின் இயல்பு . ஆகவேதான் இவளை மலைமகள் என்கிறோம்
வாழ்வின் அனுபவத்தால் ஞானம் கொடுத்து முற்றிய மூன்றாவது கண்ணை உடையவளான இவளால் வம்பான பிறவித்தொடரை நாம் கடந்துவிடலாம்

ஞானம் நிரம்பிய நிலையில் அதனை வாரிவழங்கிய சர்குருவான அன்னையின் மீது
நன்றி கடனாக கொப்பளித்து வரும் பரவசம் பித்தனைப்போல உலகிற்கு தெரியும்
விழியில் நீர்மல்கும் மெய்ப்புளகம் உண்டாகும் ஆனந்தம் அரும்பிததும்பும் சுவையால் அறிவு மயங்கி மொழி தடுமாறும்

இவையெல்லாம் அபிராமி பட்டருக்கு நேர்ந்துகொண்டு இருந்தது . அப்போதுதான்
ராஜா இன்று என்ன நாள் என கேட்டபோது அம்மாவாசையை பெளர்ணமி என சொன்னார்
அது உயிருக்கே உலையாகி போனது
ஆனால் பக்தன் சொல்கிறான் ; இந்த பித்தை தரும் அபிராமியின் வழிகள் நன்மையானவை என்கிறான்
ஏனென்றால்தன் பிள்ளைகளுக்காக எதையும் செய்பவள் தாய் என்பது அவன் அனுபவம்
எனக்கு என்ன நடந்தாலும் எனக்கு என்ன ?
நன்றே நடந்தாலும் என்ன
தீமையே நடந்தாலும் என்ன
நன்மை தீமை என்ற இருமையை கடந்துவிட்ட பக்குவத்தை
சகலமும் இறைவனாலும் அவரது தேவர்களாலும் நடக்கிறது
அதில் நான் ஒரு பார்வையாளன்
என்ற பக்குவத்தை நீதானே கொடுத்தாய்
உனக்கே பரம்
உனக்கே பரம்
சரணடைந்து விட்டேன்
சரணடைந்து விட்டேன்
விடுதலை பெற்ற முக்தனுக்கு மரணபயம் கிடையாது
அழியாத குணக்குன்றே
அருட்கடலே
இமவான் - உன்னதமான ஞானத்தில் வாழ்வோர்க்கு மகளும் ஆனவளே
கோமளமே

Abirami Anthathi 96-100







இயல்பாகவே நறுமணம் உள்ள வாலிப்பான உடல்வாகு சிலருக்கே அமையும் கோமளவல்லி திரிபுர சுந்தரி சிவகாம சுந்தரி
அலங்காரம் இல்லாமலேயே பளிச்சென்று இருப்பாள் காளி கருத்த மென்மையான உடலும் குழந்தையின் முகபாவமும் உடையவள் காளி
அவளின் உக்கிரத்தை மட்டுமே கண்டு படிமத்தை ஏற்படுத்திக்கொண்டோம்

அவளே காமாட்சி ; மீனாட்சி ; அபிராமி ; சிவகாமியாக தன்னை வியாகப்படுத்தி
சிவனுக்கு இதமாளிப்பவள் என்ற படிமம் அவளின் பக்தர்களுக்கு உணர்த்தப்படும்
அல்லியும் தாமரையும் ஒன்றுக்கு ஒன்று இயல்பால் வேறுபாடு உள்ளது
அல்லி வெண்மையாக இருக்கலாம் ஆனால் கடினம் நறுமணம் இல்லாதது இரவில் மட்டுமே மலரும் அதன் இயல்பு மாயை உக்கிரகாளிக்கு அடையாளம்
தாமரையோ தண்ணென்று குளிர்ச்சியின் அடையாளம் . இதம் ; மென்மை நறுமணம் பகலில் மலரும் . அதன் இயல்பு அமைதி சாந்தம் ஞானம்
சிவகாமசுந்தரிக்கு அடையாளம்
இந்த இரண்டாகவும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளுகிறாளே தவிர அவள் இரண்டையும் கடந்தவள்
இரண்டையும் சமரசப்படுத்தி சமாதானத்தை இயல்பாகவே உள்ளவள்
அல்லியும் தமாரையும் ஒரே இடத்தில் வளர்வதில்லை
அந்த தடாகத்தின் இயல்பும் அதுபோல இருக்கும்
ஆனால் இரண்டு இயல்புகளையும் சமரசப்படுத்தி சாந்தப்படுத்தியது யாமளம்
சியாமளா என்பது சமாதானி
எதையும் எல்லா மதங்களையும் சமரசப்படுத்த முடியக்கூடிய வல்லமை உள்ளவள்
வரப்போகிற சமரச வேதத்தின் அதிபதியானவள் அன்னை
வாலை ; பாலாம்பிகையின் கையில் உள்ளது சமரச வேதம்
எதோ ஏட்டை வைத்திருக்கிறாள் என்ற அளவுதான் உபாசகர்களுக்கு இதுவரை தெரிந்திருக்கிறது
அந்த ஏட்டை அவள் திறந்து காட்டவில்லை
அதை அவளால் காட்டபட்டோருக்கு கலியுகத்தை முடிக்க அவள் வைத்திருக்கும் ஆயுதம் என்பதை அறிவார்கள்

மதச்சண்டைகளால் பூமி ரத்தம் சிந்தி அல்லோகலப்பட்டாலும் ; மத பேதங்களை
சரியாக கலைந்து சகல மதங்களையும் இணைவாக மாற்றவல்ல சமரச வேதம் வாலையின்
கையில் இருப்பது
அன்னையே சமாதன காரணி ஏதம் இல்லாதவள்
சகல கலைகளும் உணர்ந்தி தெளிந்த ஞானி
அவளைப்பற்றி எழுத முடியாத அளவு இயல்புள்ளவள்
யாமளம் + சாமளம் = சியாமளம்
கருப்பும் சிவப்பும் கலந்தால் வரும் மஞ்சள் நிறத்தவள்
கருப்பு தீமைக்கு அடையாளம்
சிவப்போ நன்மைக்கு அடையாளம்
இரண்டையும் தன்னுள்ளே அடக்கி சமப்படுத்தியது மஞ்சள்
ஆகவே மஞ்சளை மங்களம் என்றார்கள்
இருமைகளை அடக்கி கடந்தால் மட்டுமே மங்களம் உண்டாகும்
அன்னையை முழுமையாக உணரவல்லோர் யார்
மாயையும் அவளே ஞானமும் அவளே
இந்த இரண்டின் எந்த கலவையை அவள் என்ன என்ன வண்ணமாக பக்தனுக்கு காட்டிக்கொண்டிருக்கிறாள் என்பதை யார் அறிவார்
அவளின் ஏதொ ஒரு கலவையை அறிந்தோர் எல்லாம் அன்னையை அறிந்துவிட்டதாக தங்களைத்தாங்களே ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்
அம்பிகை உபாசகர்கள் பல தவறுகளும் செய்கிறார்கள்
மந்திரவாதம் செய்கிறவர்களாகவும் இருக்கிறார்கள்
அவளே இவளே என்று வைது ஏவல் பில்லி சூனியம் வைக்க அவளையே பயன்படுத்தவும் செய்கிறார்கள்
அவர்கள் அவளை உணர்ந்தது ஒரு சிறு பகுதி

உலகத்தின் தவறுகள் மாயைகள் எல்லாவற்றிற்கும் இடம் கொடுத்து அவைகளை
செய்வோரையும் காத்து எப்படியேனும் உணர்வித்து அவைகளிலிருந்து
விடுபடமாட்டார்களா என்கிற விதம் அவள் பொறுமையாக இருப்பாள்
அக்கிரமம் அளவுக்கு அதிகமானால் உக்கிரகாளியாக போட்டும் தள்ளிவிடுவாள்
மாயையும் அவளே ; உக்கிரகாளியாக சிவனையும் மிதிப்பாள்
அது அளவான பாவத்திற்குள் இருக்கும் அளவு
பாவம் மிகுந்தாலோ மகிசாசுரமர்த்தினியாக அழிப்பாள்
குற்ற உணர்வோடு தவறுகளிலிருந்து கரையேற்ற வேண்டினால் பவதாரிநியாக பாவப்பரிகாரம் நல்குவாள்
தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா, கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா,
ஆட்டியவா நடம்--ஆடகத் தாமரை ஆரணங்கே.
நாட்டியஅரங்கின் ஆரணங்கு அவளல்லவா

அவளின் நாடகத்தில் எந்த பகுதியில் நாம் இருக்கிறோமோ ; இதில் அவளோடு உறவு
இருப்பதால் அவளை முழுதும் உணர்ந்துவிட்டதாக அம்பிகை உபாசகர்கள்
நம்பிக்கொள்வதுதான் அழிவுக்கு ஏதுவாகிறது
தன்னை உள்ளவண்ணம் அவளாக காட்டினால்தான் ஆயிற்று
ஆகவேதான் இங்கு பக்தன் சொல்லுகிறான்

உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அவளை தொழுதுகொள் ; சரணாகதியை
விட்டுவிடாதே ; அவளை வேலை வாங்கினால் ஆரம்பத்தில் செய்வாள் ; அந்த
அனுபவத்தை நம்பி ஏவல் செய்யாதே ;
அவளுக்கு அடிமையாகவே இருந்துவிட்டால் ஏழு உலகங்களுக்கும் அதிபதியாகவும் மாற்ற அவளால் முடியும்

சூரியன் சந்திரன் குபேரன் இந்திரன் பிரமன் புராரி, முராரி கந்தன், கணபதி,
காமன் முதலான பலவகைப்பட்ட தேவர்களும் பொதியமுனி முதலான சித்தர்களும்
முத்தர்களும்
சாதித்த புண்ணியர் எண்ணிலர்களும் தையலை போற்றித்தான் உயர்ந்தார்களாம்

அதிதேவர் சிவனாருக்கு ஒரு கையில் தீ அக்கினி தேவி வந்து அமர்ந்திருப்பாள் ;
தலையிலோ கங்கை வந்து அமர்ந்திருப்பாள் . அந்த பாவனையில் அடுத்த பெண்களோடு
வந்து பெண் கேட்டால் அன்னை ஒத்துக்காமலும் போய்விடுவலல்லவா
அவைகள்
இருந்தாலும் இல்லாததுபோல பொய்யை உண்டுபண்ணிக்கொண்டு சாதாரண மனிதனைப்போல
உமையோடு மகிழ்ந்திருக்க தைமாதத்தில் அன்னையின் அடிகளில் சங்கரனார் வந்து
மலர்சொரிந்து மயக்கினாராம் .
பக்தி சாதனத்திற்கு பல சிறப்புகள் உள்ளன . அது எளிதாக திட்டலாம் என்பதுதான்

இங்கு பக்தன் அன்னையை குழந்தையாக பாவித்து திட்டத்தொடங்குகிறான் .
உண்மையான அன்புடைய பக்தர்களின் நெஞ்சத்தை தவிர ஆசா பாசம் உள்ள பொய்யர்களின்
அன்பை ஒதுக்கத்தெரியாத முட்டாளே . யார் அன்பு காட்டினாலும் ஓடுகிறாயே
தராதரம் பார்க்கத்தெரியாதவளே
ஆனாலும் அப்படி பொய்யை நம்பி ஏமாறுகிற
உன் புத்தியும் நல்லதாக போய்விட்டது . சங்கரனாரின் பொய்யை நம்பி அவரை
சந்தோசமாக ஏற்றுக்கொண்டாய்
எழிலும் நீரோடைகளும் நிரம்பிய கானகத்தில்
குயிலோசையைப்போலும் அதுகேட்டு ஆடும் மயிலைப்போலும் ஒயிலாக பூமியில் வந்து
வந்து உதித்தவள் புவனேஸ்வரி
கலியுகத்தை அழிவுக்கு தப்புவிப்பவள்
தன் சமாதான உக்தியால் இறைபேரரசுக்கும் கலியுக பூமிக்கும் மோதலை தவிர்ப்பவள்
அழிவுக்கு அதிபதியான சிவனுக்கு அன்னையை பரிசாக கொடுத்து பூமியின் ஞானிகள் பக்தர்கள் ஆன இமவான்கள் நல்லினக்கப்படுத்திக்கொண்டார்களாம்
கனங்குழை

ஆணுக்கு அழகு கெளரவம் அந்தஸ்து எல்லாம் அவனுக்கு அருகில் இருக்கும் அவனின்
மனைவியின் அலங்காரத்தால் ஆடை அணிகலன்களால் வெளிப்படையாகும்
அப்படித்தான் ஆரம்பகால மனிதர்கள் மனைவியை அடையாளப்படுத்தி மதிப்போடு நடத்தி வந்தார்கள்
ராஜசபையில் ராணி சர்வலங்கார ரூபிணியாக சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பாள்
ராஜா அலுவல் பார்த்துக்கொண்டிருப்பார் . ராணிக்கு வேலையே இல்லாவிட்டாலும் தர்பாரில் சேவை சாதிப்பாள்
தனக்கென தனி நிதி வைத்துக்கொண்டு கோவில் குளங்களை செப்பம் செய்து திருப்பணி செய்துகொண்டே இருந்தார்கள்
பெண்களை மதிக்காத குடும்பமும் உறுப்படாது ; நாடும் உறுப்படாது
உக்கிரம் அடங்காத காளியை அவளின் பொற்பாதங்களை தன் நெஞ்சிலே ஏற்று அய்யன் சாந்தப்படுத்தவில்லையா ?

மனிமகுடத்தோடு காதை தழுவிய குழை அதிலிருந்து பாதம் வரை வழியும் கொன்றை
மலர் மாலைகள் திருக்கைகள் நெடுந்தோழ் ; புன்னகை ததும்பும் கருணை முகம் ;
கரும்பு வில் ; பலவகையில் மாறுபடும் வல்லமை உள்ள அம்பு போன்ற பார்வையுள்ள
திருக்கண்களும் சுட்டெரிக்கும் மூன்றாவது கண்ணும் உடைய நின் அழகிய திருமேனி
எப்போதும் என் நெஞ்சில் உதிக்கட்டும்
பக்தன் தன்னில் எதை ரசித்தானோ அந்த குழையையே அவிழ்த்து வானில் எரிந்து பெளர்ணமியை போல முழுநிலவு தோற்றத்தை உதிக்கவும் விட்டாள் அவள்
அன்னையால் எதையும் சாதிக்க முடியும் . தன் பக்தர்களை கோழி குஞ்சுகளை காப்பதுபோல காப்பாள்
ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும்
சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.


Abirami Anthathi 1 - 4

தார் தாரகா பூக்கும் கொன்றை மலர்களையும் சண்பக மலர்களால் ஆன மாலைகளையும் விரும்பி அணியும் தில்லை ஊரார் சிவனின் இடபாகத்தை கைப்பற்றிக்க...