Total Pageviews

Sunday, 18 August 2019

Abirami Anthathi 1 - 4




தார் தாரகா பூக்கும் கொன்றை மலர்களையும் சண்பக மலர்களால் ஆன
மாலைகளையும் விரும்பி அணியும் தில்லை ஊரார் சிவனின் இடபாகத்தை
கைப்பற்றிக்கொண்டவளான உமையின் மைந்தனான கணபதியே ; மேகம் குவிந்த மேனியை
உடையவரே

ஏழு லோகங்களை பூத்தவளான அன்னை அபிராமியைப்பற்றிய சிறப்பான
அந்தாதி இரவு பகலாக என் சிந்தையை ஆட்கொண்டதால் மதிமயங்கி பயித்தியம் போல
நான் ஆனதை நீ அறிவாய்

அபிராமி பட்டர் வரலாறை அறிந்தவர்களுக்கு சில
நாட்களாக அவர் பூசை பணியை ஒழுங்காக செய்யாது ; கோயில் வளாகத்தில் அங்கும்
இங்கும் அமர்ந்துகொண்டு தியானத்தில் ஆழ்ந்துகிடந்தார் அவராக சிரிப்பதும்
அழுவதும் பயித்தியம் போன்ற முகபாவனைகள் வேறு அவரிடமிருந்து
வந்துகொண்டிருந்தன

இப்படி இருப்பவை மற்ற பட்டர்கள் ; பொதுமக்கள் எதோ ஆயிருச்சு என்கிற அல்;அளவில் உச்சுக்கொட்டி கொண்டிருந்தனர்
அப்படி பரவசத்தில் அவர் ஆழ்ந்திருக்கும் போது அங்கு தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் வந்துவிடுகிறார்

பராக் பராக் என்ற கட்டியத்தை கேட்டு எழுந்து சகலரும் மரியாதை செழுத்த புற
உலகை மறந்து தியானத்தில் சிரித்துக்கொண்டும் அழுதுகொண்டும் இருந்த பட்டர்
எழுந்து நிற்கவில்லை என்பது மன்னருக்கு கோபத்தை உண்டாக்குகிறது


மன்னரின் முகபாவனையை கண்டு அவன் யார் பேச்சையும் கேட்கமாட்டான் ; ரெம்ப
ஆன்மீக பெரியவன் போல தரிக்கியும் திரிகிறான் என மற்றவர்கள் ஏற்றிவிட்டனர்


ஆகவே மன்னன் பட்டரை தட்டி யோவ் இன்னக்கி என்ன திதி என கேட்க உணர்வில்
அன்னை முகத்தை கண்டு களித்துக்கொண்டிருந்த பட்டர் பெளர்ணமி என பகிர்கிறார்

ஆனால் உண்மையில் அன்று அம்மாவாசை திதி
மன்னர் அவரை உலுப்ப அவர் பதறியடித்துக்கொண்டு விழிக்கிறார்
நான் மன்னன் வரும்போது மதிக்கவுமில்லை ; சரியான மண்டக்கிராக்கு என எல்லோரும் உன்னைப்பற்றி சொல்லுகிறார்கள்
திதி என்னான்னு கேட்ட அம்மாவசையை பெளர்ணமி என்கிறாயா
இன்று இரவு 7 மணிக்கு பெளர்ணமி வரலை என்றால் நீ செத்த என காவலுக்கு ஆள் போட்டுவிட்டு தங்கப்போய் விட்டார் மன்னர்
கிராக்கு செத்தான் இன்னைக்கு சங்குதான் என மற்றவர்கள் கிண்டல் வேறு
ஆனால் பட்டர் தன்னிலை விளக்கம் காப்புபாடலில் கணபதியிடம் சொல்கிறார்
நான் பல நாட்களாக மனத்தில் லயித்து ரசித்து உருவாக்கிய அபிராமி அந்தாதி என் மனதில் உள்ளது
அதை கட்டுரையாக வெளியே கொண்டு வர நீர் உதவி செய்யவேண்டும் என்கிறார்
அந்தாதி என்பது இலக்கணத்தில் சிக்கலான ஒன்று
முடிக்கிற வார்த்தையையே அடுத்த பாடலின் துவக்க வார்த்தையாக வரவேண்டும்
நீ ஒரு 1௦௦ பாட்டு அந்தாதி பாடினால் உன்னை விட்டுவிடுகிறேன் என மன்னர் சொல்லவில்லை
முழுநிலாவை வரவைக்கவேண்டும் என்பதே மன்னர் உத்தரவு
மரணம் வாசலில் நிற்கும்போது வேண்டுதல் செய்வார்களே தவிர சிக்கலான அந்தாதியை படவேண்டிய அவசியம் என்ன
என்ன என்றால் இந்த அந்தாதி பல நாட்களாக அவரின் மனதில் உருவாகி கட்டுரையாக வெளியே வராமல் இருந்த ஒன்று
அதில் ரசித்து லயித்து உருகி ஆனந்த பரவசத்தில் இருந்தவர் பட்டர்
அந்த பரமானந்த சுகத்தை அவள் தன்னைப்பற்றி வெளிப்படுத்தாமல் அவரால் அடையவே முடியாது
அந்த அனுபவம் உறவு அவருக்கு இருந்ததால் உள்ளே விளைந்ததை வெளியே கொட்டினார் அவ்வளவே
################

மனிதர்க்கு உச்சித்திலகமாக நெற்றிப்பொட்டு உள்ளது . அதில் குண்டலினி சக்தி
ஏறிவந்து செங்கதிர் போல சித்தர்களுக்கும் முக்தர்களுக்கும் உதிக்குமாம் .
அப்படி உதிப்பவர்க்கு அது மூன்றாவது கண் போல

ஆவிமண்டல சக்திகளின் இயக்கம் மற்றும் இறைவனைப்பற்றிய வெளிப்பாடுகள்
முக்காலத்தைப்பற்றியும் பல ரகசியங்களை அவர்கள் பெருவார்கள்
அத்தகைய ஞானிகளில் மாணிக்கம் போன்றவர் அதிதேவர் சிவன்
அவரிலிருந்து மாதுளம்போது போல பரிசுத்த தன்மை தாமரைப்பூவில் லக்ஷ்மியாக உதித்தது
பரிசுத்தமான லக்ஷ்மியை சிவன் விஷ்ணுவுக்கு அளிக்க அவர் தன் திருமார்பில் ஏற்றுக்கொண்டார்
பக்தன் இங்கு சொல்ல வருவது அந்த லக்ஷ்மியே துதிக்கும் மின்னல்கொடி அன்னை என்கிறான்
அது ஏதென்றால் சிவன் கடவுளுக்கு இணையானவராக பரலோகத்தில் படைக்கப்பட்டாலும் சாதாரண மனிதனைப்போல பூமிக்கு வந்தார்
அசுரர்கள் பார்வதியை மதிபிரளச்செய்து தீக்குள் சுயஹத்தி செய்யவைத்தார்கள்
அந்த விரக்தியால் சடையாண்டியாக சுடலைகள் தோறும் தியானம் செய்துவந்தார்

அதனால் இறக்கப்பட்டு நாராயணன் தன்னில் ஒரு வியாபகத்தை அன்னை நாராயணியாக
வெளிப்படுத்தி அவரே பூமியில் மதங்கரிஷியின் யாகத்தில் வெளிப்பட்டார்

அவர் வளர்ந்து சிவனை கவர திரிபுரசுந்தரியாக மோகனம் காட்டியும் ஆதியில் சிவன் பார்வதியின் மீதுள்ள பற்றால் இணங்கவில்லை
அன்னையின் கடுமையான தவத்தை கண்டு இறக்கம் கொண்டே காமாட்சியை அவர் ஏற்றுக்கொண்டார்

அதன்பிறகே சிவனாரின் விரக்தி மாறி பரிபூரணம் உடையவராகி மீண்டும் ஒளிசரீரம்
பெற்று வைரவன் ஆனார் ; அதிதேவர் ருத்ரனாக பரலோகம் ஏகினார்

வைரவன் பரத்திற்கு ஏறியதால் பரமேஸ்வரன் எனப்பட்டார்
சிவனுக்கு இதமும் ஆக்கமும் கொடுத்தவள் அன்னை
அதனால்தான்
மங்கலரூபினி மதியளிசூலினி மன்மதபாணியலே
சங்கடம் நீக்க சடுதியில் வந்திடும் செளந்தரி சுந்தரியே என்கிறார்கள்


அந்த நன்றிக்கடனாக வைரவனாக பரிசுத்த தேகம் அடைந்த பிறகு வைரவன் தன்னில்
ஒரு வியாபகமாக லஷ்மியை வெளிப்படுத்தி திருமாலுக்கு அளித்தார்

சில ஆதிகோவில்களில் வைரவனுக்கு அருகில் லஷ்மிக்கு சந்நிதி இருக்கும் ரகசியம் அவள் சிவனின் வியாபகம் என்பதாகும்
ஆகவே லஷ்மி தன் அண்ணியை துதிப்பாள்
மென்மையான குங்குமத்தில் தோய்ந்துள்ள மங்கலரூபினியே
மரணம் வந்ததால் என் ஆத்மா நிதானமாக அச்சமற்றுத்தான் உள்ளது ஆனாலும் என் உடல் விதிர்விதிக்கிறது
நீயே எனக்கு துணை
துணை தொழும் தெய்வம் பெற்ற தாய்
வேதங்களின் வெளிச்சத்தை அவ்வப்போது சுருதிகளாக சடங்குகளாக ஒவ்வொரு ஞானிகளும் வடிவமைப்பார்கள்
அந்த சுருதிகள் முடிவானவையல்ல
அது ஒரு கருவி உயவு
காலத்துக்கு காலம் தொழில்நுட்பங்கள் அப்டேட் ஆவதுபோல
வேதம் அடிப்படையான விஞஞான தத்துவம் போல
அவைகளைக்கொண்டு உருவாக்கப்படும் சுருதி தொழில்நுட்பம்
புது புது வெர்சனாக அப்டேட் ஆகவேண்டும்
அதற்கென்று சிலநபர்கள் வருவார்கள்

90 சதவிகிதம் பேர் சடங்கு சம்பிரதாயங்களை காப்பாதே குறியாக இருப்பார்கள் .
அதில் காலத்துக்கு ஒவ்வாதவைகளை களைந்து புதியன அடிப்படைகளை மாற்றாமல்
புகுத்தவேண்டும்

அதற்கென்றே யுகயுகமாக சில ஆத்மாக்களை இறைவன் பூமிக்கு அனுப்பிக்கொண்டே இருப்பார்

2:106. ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால்
அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம்.

சுருதிகளால் விளைய வேண்டிய பலன்களை அதிகரிக்கும் புதிய சம்பிரதாயங்களை இறைதூதர்கள் கொண்டுவருவார்கள்
எல்லா அதிதேவர்களின் அத்தாட்சி பெற்ற இறைதுதர்களும் பூமிக்கு வந்துசென்றனர்
அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் தரப்பு வேதங்களை கொண்டுவந்தாலும் ஒன்றுக்கு ஒன்று மாறுபாடுபோல மதபேதங்களும் வந்துவிட்டன
சகல அதிதேவர்கலோடும் நல்லினக்கமுள்ள ஒரே அதிதேவர் அன்னையின் அத்தாட்சியோடு வர உள்ள நபரோ சகல வேதங்களையும் சமரசப்படுத்துவார்
கலியுக முடிவு அன்னையால் தலைமை தாங்கி நடத்தப்படும்
அது அழிவு அல்ல ; சகலரையும் நல்லினக்கப்படுத்தும் சமரச வேதம்
சுருதிகள் நிலைத்திருக்கும் வேர் போன்ற சகல வேதங்களும் கொழுந்துகளும் கனிகளும் அன்னையிடம் குடிகொண்டுள்ளன
அன்னையின் ஆயுதங்கள் அழிப்பவை அல்ல ; இனைப்பவை பனிமலர் போன்ற கணைகள்
நெஞ்மையான பாசக்கயிறால் கட்டி நல்வழிப்படுத்தும் அங்குசம் உடைய திரிபுர சுந்தரி ராஜராஜேஸ்வரி என்பதை அறிந்தோம் என்கிறான் பக்தன்
வரப்போகிற சமரசவேதம் என்ற மறையை அன்னையின் திருவடியில் மனதை குவித்து அறிந்துகொண்டேன்
உன்னால் வரப்போகிற சமரச வேதாந்தியை வள்ளலார் முதலான பலரும் முன்னரிவித்துள்ளனர்

அதை ஏற்றுக்கொள்ளாத மததுவேசிகளை ; இறைவனுக்காக என மததுவேசம் செய்து
நரகத்துக்கு செல்லும் கருமிகளை நான் நிச்சயமாக ஒதுக்கியே வைப்பேன்

மனிதர்களும் தேவர்களும் முத்தர்களும் சித்தர்களும் தலை தாழ்த்தி வணங்கும் கோமளமே

கொன்றை மலர்களால் நிரம்பிய சடையில்பிறையையும் நாகதேவியையும் கங்கையும்
அணிந்துள்ள புனிதரான சிவனும் நீரும் எப்போதும் என் சிந்தையில்
இருப்பீர்களாக


Abirami Anthathi 5 - 9



பக்தனுக்கு வியப்பு உண்டாகிறது
கணவனைப்போலவே இவளும் மூன்றாவது கண்ணை திறந்துகொண்ட வல்லமை உள்ளவள்
மனம் செம்மையாகும் போது ; பக்குவப்படும்போது மட்டுமே மனோன்மணியாக மூன்றாவது கண் திறக்கப்படும்
மூன்றாவது கண் திறக்கப்பட்டவர்களால் முக்காலத்தையும் உணரமுடியும்
இறைவனையும் அவரது தேவமண்டல சக்திகள் பலரையும் தரிசிக்க முடியும்
அவர்களோடு பேசவும் இறைவனது நடப்பு சித்தத்தை உணர்ந்து அதற்காக பிரார்த்திக்கவும் ஒத்துழைப்பு செய்யவும் முடியும்
கலியுகத்தை முடிப்பதற்கு பலவகையான முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டாக வேண்டும்
பல புருஷர்களின் பாவசாபங்களில் விமோசனம் அடைந்தாக வேண்டும்
அத்தகையவர்களே பூமியில் இறைபேரரசை வரவேற்கும் காரியத்தை செய்யமுடியும்
அம்மையும் அப்பனும் என்ற முறையில் அத்தகைய மனிதர்களை பூமியில் சாதனை செய்விக்கும் பொறுப்பு இவர்களுக்கும் இருக்கிறது

தன் கணவரோடு பொருந்திய சிந்தனை இவளுக்கு எப்படி இயல்பாக வருகிறது என்றால்
அவரின் நெஞ்சோடு புறக்க அவளின் மார்பு எப்போதும் வருந்திக்கொண்டே
இருக்கிறதாம்

அதுமட்டுமல்ல அவர் விசத்தை குடித்தபோது அந்த நஞ்சை அமுதமாக ஆக்கி அவரை காத்தது யார் என்றால் அது அம்பிகையின் உள்ளங்கைகைகள் ஆகும்
அவள் தன் கையால் அவரின் கழுத்தை பிடித்து விசத்தை அமுதமாக மாற்றிவிட்டாள்
சிவனாரின் கழுத்திலே நின்ற விசத்தை அவர் கழுத்தில் உள்ள நாகமாக அடையாளப்படுத்தினார்கள்
அது ஏதென்றால் அம்பிகையின் சேடிமார்கள் எழுவரும் வாசுகியின் அம்சமானர்கள்
சப்தகன்னியர்
எழுவர் ஒன்று சேர்ந்தால் எவ்வளவு சக்தியோ அவ்வளவு சக்தி உள்ளவள் அன்னை
அவளால் நஞ்சு அமுதமாக மாறாதா
ஆனாலும் அந்த சனப்பொழுதில் விஷம் சிவனாருக்கு பாதிப்பை கொடுத்து அவர் மயக்கமுற்று சுருண்டு படுத்துவிட்டார்
அவரை தன் மடியில் தாங்கி அன்னை ஆசுவசப்படுத்தினாள்
சகல தேவர்களும் வந்து சிவனாருக்காக ஆதி இறைவனை பிரார்த்தித்தார்கள்
இந்த ஸ்தலமே சுருட்டப்பள்ளி எனப்படுகிறது
பரத்திலே தோஷம் பாதித்தது என்பதாலேயே பர + தோஷம் = பிரதோஷம் என்பதாக அந்த நிகழ்வு அடையாளப்படுத்தப்படுகிறது
அம்மையையும் அப்பனையும் சேர்த்து சப்பரத்தில் சுற்றி தரிசிக்க வைப்பார்கள்

நான் மீண்டும் மீண்டும் சொல்வது நம் புராணங்கள் சிவன் வரம் கொடுத்து
மாட்டிக்கொள்வார் நாராயணன் வந்து கப்பார் ; நாராயணன் வரம் கொடுத்து
மாட்டிக்கொள்வார் சிவன் வந்து காப்பார் என பலமுறை சொல்லும்

எங்கே சிவனும் நாராயணனும் ஒன்றாக சேர்ந்து இருப்பார்களோ அங்கே வெற்றி அதாவது இறைவனின் முழுபிரசன்னம் இருக்கும்
ஆகவேதான் சிவன் கோவில்களில் அன்னை வடிவில் நாராயணனின் அம்சத்தை சிவனோடு சேர்த்து பிரதோசத்தில் சுற்றிக்காட்டுகிறார்கள்
பாற்கடலை கடையும்போது ஆதிசேஷன் கக்கிய விசமாக முந்திவந்தவள் காளியே ஆகும்
நாகேஸ்வரியும் அவளே
ஆனால் அன்னையாக சாந்தமாக சிவனின் துணையாக தன்னை திருத்திக்காட்டுபவள் அவள்
காளியே காமாட்சியாக மீனாட்சியாக விசாலாட்சியாக தன்னை மாற்றி காட்டுவதால்தான் அவளை கெளமாரி என்கிறார்கள்
பக்தன் திருந்திய சுந்தரி என்கிறான்
அவள் மரணத்தை வெல்லக்கூடியவள் - அந்தரி
அவளின்பொற்பாதங்கள் என் தலையில் பாவட்டும் என்கிறான் பக்தன்
என் தலையில் இருப்பது உன் பாதங்கள் என்றால் என் சிந்தையில் மண்டிக்கிடப்பதோ உன் திருநாமங்கள்
உன் அடியாருடன் கூடி முறை முறையாக பல வழிகளில் பரமாகம பக்திகளை நான் முன்னெடுத்துக்கொண்டிருக்கிறேன்
உன்னைக்குறித்த தாகத்தால் என் ஆவி தயிர் கடையும் மத்தைப்போல சுழன்று கொண்டுகிறது
ஆனாலும் தளர்வு சோர்வு அடையாதபடிக்கு நற்கதியை நீயே வழங்குகிராய்
பிரம்மாவும் சிவனும் நாராயணனும் துதிக்க கூடிய சிறந்த பாதங்களை உடைய சிந்துர சுந்தரியே
என் தந்தையின் துணைவியே மகிசாசூரனை கொன்று அவன் தலையை பாதபடியாக மாற்றிக்கொண்டவளே
நீலி அழியாத கன்னியே
ஆரனத்தோனின் சரீரத்தில் நறுமணகந்தங்களை தரிக்கும் உள்ளங்கைகளை உடையவளே
என் பாவப்பதிவுகளை நீயே மாற்றியருள வேண்டும்
சிவனின் மீதுகொண்ட தாபத்தால் கருத்த கண்ணை உடையவளே
பிள்ளைக்களுக்கு பால் அருளுவதர்காக பெருத்த தனங்களை உடையவளே

திருமார்பில் ஆபரணங்களும் இடுப்பில் ஆரமும் அம்பையொத்த கண்களும்
செங்கைகளும் சிலை போன்ற மேனியையும் உடைய நீ உன் மனவாளனோடு எனக்கு காட்சி
அருள்வாயாக

Abirami Anthathi 10-14





திருநீர்மலையில் நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தான் என நாராயணனை சேவை சாதிக்க வைத்திர்ப்பார்கள்

உலகம் முழுதும் தண்ணீர் கடலில் முழ்கியிருந்த போது முதலில் வெளிப்பட்ட நிலம் எதுவென்றால் அது திருநீர்மலை என்பது ஐதீகம்

அதிதேவர் நாராயணன் எல்லா நிலைகளிலும் பக்தர்களுக்காக சேவை சாதிப்பதுபோல இங்கு பக்தன் எல்லா நிலைகளிலும் அன்னையை பக்தி செய்வதாக கூறுக்கிறான்

எப்போதும் உன் நினைவாகவே நான் இருக்கிறேன் ; உன் மலர்ப்பாதங்களையே போற்றி வழிபடுகிறேன்

உமையே ; உன்னதமான ஞானிகளின் உச்சித்தாமரையில் அன்றாடம் புத்தியிர்பாக உதித்து கழிவுகளை கடத்திவிடுபவளே

பிராணன் ஆகவும் அபானன் ஆகவும் வளர்சிதை மாற்றங்களை சகல ஜீவர்களுக்கும் அன்னையே நடத்துகிராளாம்

அன்னையின் சில அம்சங்களை அன்றே பிறந்து அன்றே அழிபவள் என்பதாக ஐதீகப்படுத்துவார்கள்

முத்தாலம்மன் வழிபாடுகளில் பீடங்களில் நிரந்தர சிலை இருக்காது

திருவிழாவுக்கு சிலை செய்துகொண்டுவருவார்கள்

காலையில் கண் திறந்து வழிபாடுகள் செய்து அன்று மாலையே ஆற்றில் கரைத்துவிடுவார்கள்

அன்றே தோன்றி அன்றே மறைவது என்பது வளர்சிதை மாற்றம் என்ற சக்தியை குறிப்பது

அது சரியாக இருந்தால்மட்டுமே அழியாத முக்தி ஆனந்தம் என்ற நிலையை எட்டமுடியும்

உயிர்ப்புள்ள ஜீவனுள்ள அதிதேவர் அன்னை நாராயணி ஆவார்

அவரே சாந்தியை சமாதானத்தை சுகவாழ்வை கொடுக்கவல்ல அதிதேவர் ஆவார்

வெளிநாட்டுவேதங்களில் அன்னையை ஆர்க் ஏஞ்சல் ராபேல் என்கிறார்கள்

இறைவனது ராஜ்ஜியத்தில் இவரே சமாதான காரணி

சகல அதிதேவர்களுக்கும் நல்லினக்கமானவள்

வரப்போகிற சத்திய யுகத்திற்கு முன்பு அச்சாரமாக கலியுகத்தை முடிவுக்கு கொண்டுவருகிற வல்லமை ; சகல முரண்பாடுகளையும் நீர்த்து போகச்செய்து சமரசப்படுத்தி இறைவனோடு உலகத்தை இணக்கப்படுத்தும் சமரச வேதத்தை கொண்டுவரும் இறைத்தூதர் அன்னையின் சீடராகமே இருப்பார் என்பது முன்னறிவிப்பு

அவர் மூலமாக சகல மதங்களையும் ஒருகினைக்கும் அந்த வேதம் வெளிப்படும்

அது இதுவரை உலகில் வெளிப்படையாகவில்லை

அந்த எழுதா மறையின் அரும்பொருள் அன்னையே ஆகும் என்கிறான் பக்தன்

என் அறிவாகவும் அருளமுது நிரம்புவதால் உண்டாகும் ஞானமாகவும் வானத்திற்கு அந்தம் எல்லை எவ்வளவோ அவ்வளவு வடிவம் உடைய மாசக்தியாகவும் நீல நிறமாகவும் கானமாகவும் அதற்கு இசைந்து ஆடும் மாயிலாகவும் சிவனாரின் கண்களுக்கு இதமளிப்பவலாகவும் உள்ளவள் நீ

இதுவரை வெளிப்பட்ட வேதங்கள் நான்கிற்கும் முடிவாக அதாவது சங்கமிக்கும் சமரசவேதம் உன் பாதாரவிந்த்தங்களில் சரணடைவோறுக்கு வெலிப்படையாகும்

உன் புகழ் பாடுவதே எனக்கு ஆத்மதிருப்தி கொடுக்கிறது . உனது இயல்புகள் ஒவ்வொன்றாக உணர்ந்து அவைகளால் உனக்கு உண்டான பெயர்களை கற்றுவருகிறேன்

பகல் இரவாக உன்பாதாம் புயத்தில் கசிந்து பக்தி செய்வதால் உன்னை நயந்தோர் அவையில் என்னை முன் நிறுத்துகிறாய்

என் வாழ்விலும் அவைகளில் முக்கிய இடம் கிடைக்கும் அந்தஸ்துகள் உன் கிருபையால் வருபவை

ஈரேழு பதினான்கு லோகங்களையும் பூத்தவள் புவனேஸ்வரி

அதை காக்கிரவலும் பின்பு கழிவுகளை நீக்குகிரவளும் அவளே

சிவனார் பரலோகத்தில் படைக்கப்படும் முன்பே சக்தியாக அன்னை அங்கே இருந்தாள் ; அதனால் மூத்தவள்

மூவராகவும் தனித்தனியே பிரிந்தும் இயங்குவார்கள் அதே நேரத்தில் ஒருவர் போல இணைந்தும் இயங்குவார்கள் ; அப்படியொரு நிலை பரத்திலே உள்ளது அவரே முகுந்தரான நாராயணன்

ஒருவராக அறிதுயில் கொண்டிருப்பார் நாராயணன்

விஷ்ணு ஆதிசேஷன் நாராயணி என மூவராகவும் தனித்தனியே இயங்குவார்கள்

மூப்பு இல்லாத இந்த முகுந்தரில் இளையவள் அன்னை செல்லம்

மூத்தவள் இளையவள் அதே நேரத்தில் மாத்தவளும் கூட

மாத்தவள்

என் வழி தனீ வழி என மாற்றுப்பாதையில் செல்பவள்

அல்லது கணவனை விட்டு விலகி தனியே இருப்பவள்

காளீஸ்வரி

அன்னையின் ஒரு வியாபகம் ஆனால் சிவனோடு ஒற்றுமையாக இல்லை

கலியுகத்தில் கலி நடக்கவேண்டும்

அதற்கு தீமை ஆசாபாசம் அக்கிரமம் செய்பவர்களும் இருக்கவேண்டும்

நல்லது கெட்டது கலந்து செய்பவர்களுக்கு சிவன் முதலான நான்கு அதிதேவர்களும் ஆசி செய்வதில்லை

ஆனால் பாவத்தில் ஆழ்ந்து செல்லவும் காளி அனுக்ரகம் செய்வாள்

பதில் விளைவுகள் வரும்போது தாங்கி திருத்தி நல்வழிப்படுத்தி ஞானமளித்து கடைதேறவும் பவதாரிணியாக அருளவும் செய்வாள்

அது தாயுள்ளம்

மென்கடி ; மென்மையான பாசாங்குசம் உடையவள்

மென்மையாக திருத்துவாள் ; அவ்வளவு எளிதாக அழிக்கமாட்டாள்

ஆனால் அக்கிரமம் பெருத்தாலோ போட்டும் தள்ளி விடுவாள் காளீஸ்வரி

அன்னையே உன்னை சரணடைந்தோர் நிச்சயமாக வானவர்களாக ஒரு நாள் ஆவார்கள்

உன்னையே சிந்திப்பவர் பிரம்மா நாராயணர் சிவனாலும் பாதுகாப்பு பெறுவார்கள்

மற்ற எல்லா அதிதேவர்களைக்காட்டிலும் உன் அருளாசியை தரிசனத்தை பெறுவது எளிது

Abirami Anthathi 15 - 20



உன் வடிவே அதிசயம் . அவரவர் தரத்திற்கு உன்னைப்பற்றி கொஞ்சம் அறிகிறார்கள்
அறிய அறிய புதிய புதிய கோணத்தில் அறிவில் ஞானத்தில் பல வெளிப்பாடுகளை தந்துகொண்டிருக்கிராய்
ஈரேழு லோகங்களிலும் உன்னை துதிக்கிரவர்களால் நிரம்பிய சுந்தரவல்லி நீயே
சிவனாரை தனியே தரிசித்துக்கொண்டிருக்கிரவர்களுக்கு அசுர ஆவிகளால் பலவகையான தொந்தரவுகள் இடறல்கள் வந்துகொண்டே இருக்கும்

அசுரர்களின் தலைவரான கருப்புசாமியின் அன்புத்தங்கையான அன்னையை சிவனாரின்
துணைவியாக இருவரையும் சேர்ந்து தரிசிப்பவர்களுக்கோ அசுர ஆவிகள் தொந்தரவுகள்
செய்யாது ஒதுங்கி செல்லும்

பிரதோசத்தன்று அம்மைஅப்பனாக சேர்த்து சப்பரத்தில் சுற்றுவதன் ரகசியம் இதுதான் தோஷங்கள் நீங்கும்
வெள்ளிக்கிழமை அன்று பள்ளியறை பூஜை பார்த்தால் பல தோஷங்கள் நீங்குவதன் ரகசியமும் இதுதான்
தேவர்கள் அனைவரும் நாராயனனிளிருந்து வியாபித்தவர்கள் தானே
அதுபோல தேவர்களில் சிலர் அசுரர்களாக மாறினார்களே அவர்களும் நாராயனனிளிருந்து வந்தவர்கள்தானே
நல்ல நாராயணன் தேவர்கள் என்றால் கெட்ட நாராயணன் அசுரர்கள் ஆகும்
பரத்திலே இந்த ரெண்டு குருப்புக்கும் உண்டாகிற முரண்பாடுகளே பூமியிலும் மனிதர்களில் பிரதிபலிக்கிறது
சிவனோடு அன்னையை சேர்த்து தரிசிக்கிரவர்களிடத்து ரெண்டு அண்ணன்மார்களும் பாதிப்பை உண்டாக்குவதில்லை

அசுர ஆவிகளால் மனக்குழப்பங்களில் மாயைகளில் பீடிக்கப்படாமல் மனிதர்களை
காப்பதற்காகவே அன்னை தட்சினாமூர்த்தியில் இடப்புற தோளை கவ்விப்பிடித்தவளாக
சுருட்டப்பளியில் காட்சியளிப்பாள்

முதன்முதலாக பிரதோஷ வழிபாடு துவங்கிய சேத்திரம் சுருட்டப்பள்ளி
அங்கு தட்சினாமுர்த்தியை கெளரி என்ற பெயரில் பின்புறம் இருந்து இடபக்க தோளை கைகளால் தழுவிப்பிடித்தவளாக அன்னை காட்சியளிப்பாள்
குரு குரு பத்தினியாக சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்வதாக அந்த சிற்பம் இருக்கும்
வாம பாகத்தை வவ்விக்கொண்டிருக்கும் நீயும் உன் துணைவனாரும் மகிழ்ந்திருக்கும் சிறந்த உங்கள் திருமணக்கோலம் என் சிந்தையுள்ளே
அதனால் என்னை பிடித்த பாவசாபங்கள் மாயைகள் அனைத்தையும் தீர்த்துவைக்கிரவளாக நீ இருக்கிறாய்
எனக்கு குருவாக வந்து ஆட்சி செய்கிற உன் பொற்பாதங்களை நான் சரணடைந்தவனாக இருக்கிறேன்
என் பாவசாபங்களால் தாவிப்பிடிக்க வருகிற எமதர்மன் வரும்போது குறுக்கே நிற்கிரவளாகவும் நீயே இருக்கிறாய்
கேடுகள் வரும்போது குறுக்கே நிற்கிற உன்னை பார்த்து என் விழியும் நெஞ்சும் கண்ணீரால் நனைவது அளவானதல்ல

என்னை நான் உணர்ந்து ஒவ்வொரு பாவமாக கடறுவதுவதற்கு என் ஆத்துமாவில் உள்ள
முடிச்சுகளை அவிழ்த்து நான் தெளிவதற்கு ஞானமடைவதற்கு உன் வழிகாட்டுதல்களே
காரணம்

ஒளியானது முக்கோணகண்ணாடியால் ஒன்பதாக சிதறடிக்கப்படுகிறதே ;
அப்படி ஆத்மாவை பகுத்துணர்ந்து தோண்ட தோண்ட வரும் பூதங்களான முன்னை
வினையின் முடிச்சுகளை அவிழ்க்கிறாய்

விக்ஞானம் விப்ஜியார் என ஒளி
ஏழு வண்ணமாக பிரிகிறதாக ஆரம்பத்தில் சொல்லிற்று . அதற்கு முன்பே மெய்ஞானி
ஒன்பதாக பிரிகிறது என இப்பாடலில் சொன்னார் . அதை இப்போது அல்ட்ரா வயலட்
அல்ட்ரா ரெட் என இரண்டு ஒளிகற்றைகள் ஆகமொத்தம் ஒன்பது என
கண்டுபிடித்திருக்கிறார்கள்

அருள்நிலையில் நிரம்பி வரும் வார்த்தைகள் மனித அறிவால் வர்வதல்ல .
அவைகள் உன்னதத்திலிருந்து வரும் உண்மைகள்
அவற்றை நாம் உணர்ந்துகொள்ள முயலவேண்டும்
அப்படித்தான் அடுத்த பாடலில் மிகமுக்கியமான உண்மை ஒன்று வெளியாகியுள்ளது
உன் ஆற்றல் உறைகின்ற உனது கோவில்களில் நிரம்பி வழிகிற உன் அடியவர்கள் ஒரு பக்கம் உன்னை துதித்துக்கொண்டே இருக்கிறார்கள்

இதுவரை வெளியாக்கப்பட்ட வேதங்களின் அடிப்படை உண்மைகளாகவும் முடிவான
உண்மைகளாகவும் ; மேற்போக்காக இந்த வேதங்கள் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாக
விசத்தை கொட்டுவதுபோல இருந்தாலும் வரப்போகிற சமரசவேதம் என்ற அமுதத்தால்
அவைகளை இதம் நிரம்பியவைகளாக நீ மற்றப்போகிறாய்

ஆனாலும் மனிதர்களாகிய நாங்களோ குறுகிய மனத்தால் எங்களை நாங்களே ஏமாற்றிக்கொள்கிறோம்
பூரணமான அண்ணாமலையில் விளங்கும் தத்துவத்தை உலகிற்கு கொடுத்த மங்கலருபினி நீயல்லவா
அது ஏதென்றால் அண்ணாமலையில் கிரிவலம் என்ற வழிபாட்டை முதல் முதலில் துவக்கியவள் அன்னையே ஆகும்
அந்த வரலாறில் உண்மை வெளியாக்கப்பட்டுள்ளது ; அந்தோ ஆனாலும் குறுகிய மனம் படைத்தோர் தவறாகவே விளக்கம் கற்பித்து வருகிறார்கள்

அன்னையானவள் கோவிலில் இறைவனை காண 14 ஆண்டுகள் தவமிருந்தாள் . அப்படி
தவமிருந்தும் காணமுடியவில்லை . அப்போது கார்த்திகை பெளர்ணமியன்று மலையை
சுற்றி வரும்போது மலைக்கு நேர் மேற்கே அன்னை வரும்போது மலை உச்சியில்
அருட்பெரும்ஜோதி தரிசனம் அன்னைக்கு சித்தித்தது

இந்த நிகழ்வே கிரிவலமாக மாறியது
வரலாறை எல்லோரும் ஒத்துக்கொள்வார்கள்
ஆனால் தவறாக விளக்கமளிக்கிறார்கள்

அன்னை சிவனை காண தவமிருந்தாள் ; காண முடியவில்லை . கிரிவலம் வந்து மலை
உச்சியில் சிவனை ஜோதியாக கண்டாள் என தங்களின் குறை அறிவால் விளக்கம்
கொடுக்கிறார்கள்

சிவனின் மனைவியானவள் சிவனை காணமலா இருப்பாள் . சிவனை நிச்சயமாக தினமும் கண்டவள் அவள்
ஆக அவள் கண்ட சிவனை காண தவம் செய்யவேண்டிய அவசியமில்லை

அவள் காணாத ஒருவரை சிவனை விட பெரியவரான இறைவனை ; உலகின் ஞானிகளும் மாற்று
மதங்களும் அருவ இறைவன் என சொல்லுகிறதே அந்த இறைவனை காணவே அவள் தவம்
இருந்திருக்கவேண்டும்

அந்த இறைவனைத்தான் அவள் அருட்பெரும்ஜோதியாக மலை உச்சியில் தரிசித்தாள்
கார்த்திகை தீபமாக அருட்பெரும்ஜோதியாரே அடையாளப்படுத்தப்படுகிறார்

சிதம்பரத்தில் ஜோதியாக மாறும்முன்பு மாணிக்கவாசகரும் மார்கழி மாதம் முதல்
நாள் அதிகாலையில் அடிஅன்னமாலை என்ற இடத்திற்கு வந்துசேறுகிறார்

அவருக்கும் அருட்பெரும்ஜோதி தரிசனம் கிடைக்கிறது
உடனே ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும்ஜோதியை என திருவெம்பாவை பாடத்தொடங்குகிறார்

முழுமை அடைந்தவர்கள் அனைவரும் இறைவன் அருட்பெரும்ஜோதியானவர் சிவனை விட
பெரியவர் என வள்ளலார் போல சொல்லும்போது அரைகுறைகள் அந்த ஜோதியும் சிவன்தான்
என மாய்மால விளக்கம் கொடுத்துக்கொண்டுதான் உள்ளனர்

மாயங்களை கடந்த பூரணமான அருணாசல மங்கை நீ என்கிறான் பக்தன்


Abirami Anthathi 21- 25





மங்கலமானவள் ; தன் பிள்ளைகளுக்கு அமுது கொடுத்து கொடுத்து சிவந்த ஸ்தனங்களை உடையவள் ; ஞானிகளின் சகஸ்ரத்தில் உதிப்பவள் ; கொண்டல்காற்றின் இனிய சத்தம் போன்ற குரலுடையவள் ; தன் பக்தர்களுக்கு வாரி வாரி கொடுத்து சிவந்த கரங்களை உடையவள் ; தாவி ஓடுகிற கங்கையை சடையில் அணிந்துள்ள சிவனாரின் அன்புக்கு பாத்திரமானவள் ; யோகசித்திகளில் வாசியானவள் ; நீல நிறமுடையவள் ; தண்ணீர் நிறைந்த கழனியைப்போன்றவள் ; பசுமையான பெண் கொடியானவள் நீயேயாகும்

மல்லிகொடிகள் மரத்தை பற்றிப்படர்ந்து ஏறி பூக்களால் அலங்கரிக்கும் . அத்தகைய மலையில் உள்ள அர்ச்சுனர் கோவிலை மல்லிகார்ச்சுன மலை என்பார்கள்

சிவனுக்கு எப்படி நாகதேவியானவர் விசத்தை அமிர்தமாக மாற்றி கொடுக்கிறாரோ அதைப்போல அர்ச்சுனரை தேடிவந்து அவரை மரணத்திலிருந்து விடுவித்தவர் சப்தகன்னியரில் ஒருவரான உலூபி .

சிவனுக்கு நாகதேவி ஞானம் யோகசித்திகளின் அடையாளம் என்றால் சிவனின் அம்சமுள்ள அர்ச்சுனருக்கு நாககன்னி அடையாளமாகும் . அக்கா மஹாதேவியாக அவதரித்தபோது தன் உள்ளமெல்லாம் நிறைந்த அர்ச்சுனரை சென்ன மல்லிகார்ச்சுனா என பாடிபாடி துதித்தார்

ஆதிசேஷரே ஞானத்தின் அதிதேவராவர் . அவராலேயே உயிர்ப்பிக்கவும் முடியும் . சிவன் உண்ட விசத்தை அமிர்தமாக மாற்றி அவருக்கு மரணமில்லா பெருவாழ்வு கொடுத்தவள் ஆதிசேஷரின் அம்சமான வாசுகியே ஆகும் . அதைப்போல கொல்லப்பட்ட அர்ச்சுனரை உயிர்பித்தவள் நாககன்னி மல்லிகாவே ஆகும் .

பக்தன் துதிக்கிறான் :

சகல வேதங்களை சமரசப்படுத்தி இதமாக்கும் பரிமளமே
பனிபடர்ந்த இமயத்தைப்போல மகிழ்சியை கொடுப்பவளே
பிரம்மா முதலான தேவர்களின் சக்தியாக இருப்பவளே
எனக்கு வந்த வம்பால் மரணம் காத்து இருக்கிறது

சிவனாரையும் அர்ச்சுனரையும் மரணத்திலிருந்து காத்தது போல என்னையும் காப்பாயாக

நின் கோலம் அல்லாது வேறொன்றும் என் மனதில் நிற்காது
நின் அடியவர் திருக்கூட்டத்தை குறை கூறேன்

மிக எளிதாக யாருக்கும் அவரவர் தரத்திற்கு இறங்கிவந்து உறவாடுபவள் அன்னையே ஆகும் . மற்ற அதிதேவர்களைப்போல தராதரம் விரும்பமாட்டாள் ; ஏனென்றால் இவளே புவனேஸ்வரியுமாவாள் . கலியுகத்தால் உலகம் அழியாதபடி தாய்மையால் அவர்களையும் காத்துவருபவள்

மற்ற மூன்று அதிதேவர்களும் வேறுவேறு போல தெரியும் வேதங்களை பூமிக்கு அருளுகின்றனர் . அதனால் மத துவேசங்கள் கூட வருகின்றன . ஆனால் மூவரின் அன்புக்கு பாத்திரமாகி அவர்களோடு உறவை காத்துக்கொள்ளும் நீயோ உலகுக்கே அருமருந்தாக இருக்கிறாய்

சகலவற்றிக்கும் வெளியேயும் உள்ளேயும் ஊடுருவி நின்று உள்ளத்திற்குள் சாந்தியையும் சமாதானத்தையும் அருளுகிராய் . இறைபேரானந்தம் உண்டாவதால் அண்ணாக்கில் அமிர்தம் ஊறுகிறது

அமிர்தம் ஊறுமிடம் மணியாகும் . சகஸ்ரத்திற்கு கீழே ஆக்கினைக்கு உள்ளே ஒரு சவ்வு மணியைப்போல உள்ளது . அதற்கு மஞ்சள் நிறத்தில் ஒரு நரம்பும் வெள்ளை நிறத்தில் ஒரு நரம்புமாக ஏறவும் இறங்கவும் இருக்கிறது . இதில் உயிரை ஏற்றி அந்த பெட்டகத்தை திறந்து பூட்டிவிட்டால் அதுவே ஜீவசமாதி . உடல் உண்பதையும் கழிவையும் நிறுத்தி விடும் . சகல செயல்பாடுகளும் ஒடுங்கிவிடும் . ஆனால் அழுகாது

அந்த மணியில் உயிர் நின்று ஒளியாக துலங்கும் . தம்மை அண்டிவந்தோரின் உயிராற்றலையும் உயர்த்திவிடும்

அத்தகைய ஞானிகளை அணியாக அணிந்துள்ளவள் அன்னை . அணிகலன்களுக்கு அணியானவள் .

உன்னை அனுகாதவர்கள் பிணிக்கு ஆளாகிறார்கள் . உலகின் பிணிகளுக்கும் மருந்தாக இருக்கிறாய் ; தேவர்களுக்கு அமிர்தமாகவும் இருக்கிறாய்

உன் பத்மபாதத்தை பணிந்துகொண்டாள் ; சகல தேவர்களும் அருள்புரிவார்கள்

உன்னையும் உன் அடியவர்களையும் பேணினால் மரணமில்லா பெருவாழ்வின் ரகசியத்தை உணர்ந்துகொள்ளலாம் . ஆகவே உன்னையே போற்றித்துதிப்பேன்

Abirami Anthathi 26 - 30



ஈரேழு பதிநாலு லோகங்களையும் படைத்தும் காத்தும் அழித்தும் வருகிறவர் இறைவன் ஆகும்
அவரை இடைவிடாது தியானிக்கிறவர் (ஏத்தும் அடியவர்)அதிதேவர் சிவனாகும்
அத்தகைய சிவனே மணம் கமழ்கிற பூக்களை அன்னையின் குழலுக்கு சாத்தி மகிழ்வாராம்

அதனால் உன் திருவடித்தாமரை எப்போதும் நறுமணத்தால் கமழ்கின்றது . அதை
அழுக்குள்ள என் நாவால் புகழாரம் சூட்ட முயற்சிப்பது நகைப்புக்கு உரியது
அன்றோ

உன் மீது உருகும் அன்பை என் உள்ளத்தில் வைத்தவள் நீயே
அதனால் என் நெஞ்சத்து அழுக்குகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகின்றன . அங்கு அருட்புனல் நிரம்பி வருகிறது
அந்த அருளால் உனது பத்ம பாதகமலங்களுக்கு துதிகளை சமர்பிக்கிறேன்
வஞ்சகம் நிறைந்த பிறவித்தளையை உடைத்து விடுதலை கொடுப்பாயாக
சொல்லும் பொருளும் இயைந்து நடமாடுவது சிவன் ஒருவரால் மட்டுமே முடியும் . மற்ற கலைஞர்கள் ஏதாவது ஒன்றை கோட்டை விட்டுவிடுவார்கள்

சலிப்பே இல்லாமல் சிவனால் நடனமாட முடிவதற்கு காரணம் அவரின் ஜீவனோடு
இணைந்து பேரானந்தத்தை உற்பவிக்க செய்வது அன்னை – மங்காத பரிமளத்தால் அவரை
புல்லுகிறாலாம் பூங்கொடி ஆனவள்

அவளின் பாதகமலங்களை இரவும் பகலும் தொழுபவர்கள் நிச்சயமாக சகல மேன்மைகளையும் அடைவார்கள்
மனித பிறவி எடுக்காமல் தவம் செய்ய முடியாது . தவம் செய்து முக்திகள் ஒவ்வொன்றாக பெற்றால் இறுதியில் முடிவான சித்தி சித்திக்கும்
அதற்கு சக்தி கொடுப்பவள் அன்னையே ஆகும்

அதுமட்டுமல்ல புத்தி பக்குவப்படவேண்டும் என்றால் அதை கெடுக்கிற அஹம்பாவம்
சுய பெருமையை அழித்து நிர்விகழ்பத்தை அவளால் மட்டுமே அருள முடியும்

அவள் யாரை அழித்தாள் ?
மகிமை சுய பெருமை பேசி மனதை கேட்டில் தள்ளும் மகிஷா அசுரனைத்தானே அழித்தாள்
ரெம்ப நல்லதாக ஆகிவிட்டது
உன்னை நான் கண்டுகொண்டதும் ; சரணடைந்ததும்
என்னை கரையேற்றுவது உனது திருவுள சித்தமாக இருப்பது

Abirami Anthathi 31-35



பக்தனுக்கு புளகாங்கிதம் உண்டாகிவிட்டது . மனித இயல்பு ஒரு நன்மையை
பார்த்ததும் இதைத்தவிர வேறு சிறப்பானவைகளே இல்லை என்று கூறுவதாகும்

இதை ஒரு புகழ்ச்சி அணியாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர ; தத்துவமாக வேதமாக ஆக்கிக்கொள்ள கூடாது
இந்த வார்த்தைகளை காரணம் காட்டி இதை தவிர எதையுமே வழிபடக்கூடாது என்று தீவிரவாதம் பேசக்கூடாது

ஆனாலும் பக்தன் ஒரு உண்மையை இங்கு சொல்கிறான் ; அது ஏதென்றால் எங்கு
சிவனும் நாராயணனும் ஒன்றாக அழைக்கப்படுகிறார்களோ அங்கு இறைவனின் முழு
பிரசன்னம் வந்துவிடுகிறது

உமையானவள் அம்சத்தில் நாராயணன் ஆவாள் . நாராயணனின் ஒரு வியாபகமே நாராயணியாக மாறி சிவனுக்கு மனைவியானாள்

இடைப்பட்ட காலத்தில் சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் குடுமி பிடி
சண்டையாகி மதவாதம் மதவெறி பிடித்துக்கொண்டு ஒருவரை ஒருவர் கொன்று கொன்று
அலைந்தனர்

மனிதர்களுக்கு கொஞ்சம் அழிக்கும் சக்தியை இறைவன்
கொடுத்திருக்கிறார் . அசுரர்கள் அதை தூண்டி விடும்போது அதுவும் நீ
கும்பிடுவதுதான் இறைவன் அடுத்தவர் கும்பிடுவது இறைவனல்ல ; அவர்களை கொன்றால்
உன் இறைவன் உனக்கு சொர்க்கம் கொடுத்தே தீருவது என காத்திருக்கிறார்
என்றவுடன் தங்கள் கொலைவெறியை தீர்த்துக்கொள்ள தயாராகி விடுகிறார்கள்


அடிதடி கலாட்டா செய்து தன் இச்சையை தீர்த்துக்கொள்ளலாம் ; சொர்க்கத்துக்கு
சொர்க்கமும் கிடைக்கும் என்றவுடன் கடவுளையே காக்க அவதாரம் எடுத்து
வந்தவர்களாக தங்களை கருதிக்கொள்கிறார்கள்

வைணவர்களை கொன்றொழித்த சைவர்கள் சிவாலயங்களில் அன்னையை நாராயணி நமஸ்துதே என துதி சொல்லும்போதாவது யோசித்திருக்க வேண்டாமா
சைவர்களை கொன்றொழித்த வைணவர்கள் விண்ணகரங்களில் தாயாராக சிவனின் அம்சமே அமர்ந்திருப்பதை யோசித்திருக்க வேண்டாமா

மகாலக்ஷ்மியே என ஆயிரம் முறை அழைத்தாலும் அவள் கண் பார்க்கவில்லை என்றால்
ஷிவானியை நமஸ்துதே என துதி சொல்லிப்பாருங்கள் அள்ளி அள்ளி கொடுப்பாள்


அப்படி உமையாக நாராயண அம்சமும் சிவனும் ஒன்றாக வந்து தன்னை பக்திக்கு
ஆட்கொள்ள செய்தனர் ; ஆகவே நான் யோசிக்க வேண்டிய விசயமே இல்லை என்கிறான்

ஆசைக்கடலில் அகப்பட்டவன் ; அந்தகன் கைப்பட தகுதி உள்ளவன் ; ஆனாலும் தாமரைப்பாதங்களை என் தலைமேல் வைத்து திருவடி தீட்சை கொடுத்தாய்
நான் செய்த பாவங்கள் காரணமாக காலன் வியாதிகளால் பீடிக்க வரும்போது ; வந்து அஞ்சாதே என்பாய்
என் மனம் உழையும் போதெல்லாம் வந்தோடி அன்னையே என்பேன்
வலிய என் மீது நேசம் கொண்டாய் ; உனது வசிப்பிடம் தகுதிகள் யாவற்றையும் எனக்கும் கொடுப்பாய்
இந்த புண்ணியம் யாருக்கு கிடைக்கும்
எனக்கு கிடைத்தது போல ; என் முன்னோர்களுக்கும் இந்த புண்ணியம் கிடைக்குமோ
தரங்கக்கடலில் ஆதிசேஷனாரின் மீது அறிதுயில் கொள்ளும் பரமாத்மாவே ; நாராயணனே
பக்தன் அன்னையை நேசித்தவன் ; பக்தி தொண்டு செய்கிறவன்
ஆனாலும் அவள் நாராயணனின் அம்சமே என்பதை அறிந்தே இருக்கிறான்

Abirami Anthathi 1 - 4

தார் தாரகா பூக்கும் கொன்றை மலர்களையும் சண்பக மலர்களால் ஆன மாலைகளையும் விரும்பி அணியும் தில்லை ஊரார் சிவனின் இடபாகத்தை கைப்பற்றிக்க...