Total Pageviews

Saturday, 17 August 2019

Abirami Anthathi 96-100







இயல்பாகவே நறுமணம் உள்ள வாலிப்பான உடல்வாகு சிலருக்கே அமையும் கோமளவல்லி திரிபுர சுந்தரி சிவகாம சுந்தரி
அலங்காரம் இல்லாமலேயே பளிச்சென்று இருப்பாள் காளி கருத்த மென்மையான உடலும் குழந்தையின் முகபாவமும் உடையவள் காளி
அவளின் உக்கிரத்தை மட்டுமே கண்டு படிமத்தை ஏற்படுத்திக்கொண்டோம்

அவளே காமாட்சி ; மீனாட்சி ; அபிராமி ; சிவகாமியாக தன்னை வியாகப்படுத்தி
சிவனுக்கு இதமாளிப்பவள் என்ற படிமம் அவளின் பக்தர்களுக்கு உணர்த்தப்படும்
அல்லியும் தாமரையும் ஒன்றுக்கு ஒன்று இயல்பால் வேறுபாடு உள்ளது
அல்லி வெண்மையாக இருக்கலாம் ஆனால் கடினம் நறுமணம் இல்லாதது இரவில் மட்டுமே மலரும் அதன் இயல்பு மாயை உக்கிரகாளிக்கு அடையாளம்
தாமரையோ தண்ணென்று குளிர்ச்சியின் அடையாளம் . இதம் ; மென்மை நறுமணம் பகலில் மலரும் . அதன் இயல்பு அமைதி சாந்தம் ஞானம்
சிவகாமசுந்தரிக்கு அடையாளம்
இந்த இரண்டாகவும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளுகிறாளே தவிர அவள் இரண்டையும் கடந்தவள்
இரண்டையும் சமரசப்படுத்தி சமாதானத்தை இயல்பாகவே உள்ளவள்
அல்லியும் தமாரையும் ஒரே இடத்தில் வளர்வதில்லை
அந்த தடாகத்தின் இயல்பும் அதுபோல இருக்கும்
ஆனால் இரண்டு இயல்புகளையும் சமரசப்படுத்தி சாந்தப்படுத்தியது யாமளம்
சியாமளா என்பது சமாதானி
எதையும் எல்லா மதங்களையும் சமரசப்படுத்த முடியக்கூடிய வல்லமை உள்ளவள்
வரப்போகிற சமரச வேதத்தின் அதிபதியானவள் அன்னை
வாலை ; பாலாம்பிகையின் கையில் உள்ளது சமரச வேதம்
எதோ ஏட்டை வைத்திருக்கிறாள் என்ற அளவுதான் உபாசகர்களுக்கு இதுவரை தெரிந்திருக்கிறது
அந்த ஏட்டை அவள் திறந்து காட்டவில்லை
அதை அவளால் காட்டபட்டோருக்கு கலியுகத்தை முடிக்க அவள் வைத்திருக்கும் ஆயுதம் என்பதை அறிவார்கள்

மதச்சண்டைகளால் பூமி ரத்தம் சிந்தி அல்லோகலப்பட்டாலும் ; மத பேதங்களை
சரியாக கலைந்து சகல மதங்களையும் இணைவாக மாற்றவல்ல சமரச வேதம் வாலையின்
கையில் இருப்பது
அன்னையே சமாதன காரணி ஏதம் இல்லாதவள்
சகல கலைகளும் உணர்ந்தி தெளிந்த ஞானி
அவளைப்பற்றி எழுத முடியாத அளவு இயல்புள்ளவள்
யாமளம் + சாமளம் = சியாமளம்
கருப்பும் சிவப்பும் கலந்தால் வரும் மஞ்சள் நிறத்தவள்
கருப்பு தீமைக்கு அடையாளம்
சிவப்போ நன்மைக்கு அடையாளம்
இரண்டையும் தன்னுள்ளே அடக்கி சமப்படுத்தியது மஞ்சள்
ஆகவே மஞ்சளை மங்களம் என்றார்கள்
இருமைகளை அடக்கி கடந்தால் மட்டுமே மங்களம் உண்டாகும்
அன்னையை முழுமையாக உணரவல்லோர் யார்
மாயையும் அவளே ஞானமும் அவளே
இந்த இரண்டின் எந்த கலவையை அவள் என்ன என்ன வண்ணமாக பக்தனுக்கு காட்டிக்கொண்டிருக்கிறாள் என்பதை யார் அறிவார்
அவளின் ஏதொ ஒரு கலவையை அறிந்தோர் எல்லாம் அன்னையை அறிந்துவிட்டதாக தங்களைத்தாங்களே ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்
அம்பிகை உபாசகர்கள் பல தவறுகளும் செய்கிறார்கள்
மந்திரவாதம் செய்கிறவர்களாகவும் இருக்கிறார்கள்
அவளே இவளே என்று வைது ஏவல் பில்லி சூனியம் வைக்க அவளையே பயன்படுத்தவும் செய்கிறார்கள்
அவர்கள் அவளை உணர்ந்தது ஒரு சிறு பகுதி

உலகத்தின் தவறுகள் மாயைகள் எல்லாவற்றிற்கும் இடம் கொடுத்து அவைகளை
செய்வோரையும் காத்து எப்படியேனும் உணர்வித்து அவைகளிலிருந்து
விடுபடமாட்டார்களா என்கிற விதம் அவள் பொறுமையாக இருப்பாள்
அக்கிரமம் அளவுக்கு அதிகமானால் உக்கிரகாளியாக போட்டும் தள்ளிவிடுவாள்
மாயையும் அவளே ; உக்கிரகாளியாக சிவனையும் மிதிப்பாள்
அது அளவான பாவத்திற்குள் இருக்கும் அளவு
பாவம் மிகுந்தாலோ மகிசாசுரமர்த்தினியாக அழிப்பாள்
குற்ற உணர்வோடு தவறுகளிலிருந்து கரையேற்ற வேண்டினால் பவதாரிநியாக பாவப்பரிகாரம் நல்குவாள்
தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா, கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா,
ஆட்டியவா நடம்--ஆடகத் தாமரை ஆரணங்கே.
நாட்டியஅரங்கின் ஆரணங்கு அவளல்லவா

அவளின் நாடகத்தில் எந்த பகுதியில் நாம் இருக்கிறோமோ ; இதில் அவளோடு உறவு
இருப்பதால் அவளை முழுதும் உணர்ந்துவிட்டதாக அம்பிகை உபாசகர்கள்
நம்பிக்கொள்வதுதான் அழிவுக்கு ஏதுவாகிறது
தன்னை உள்ளவண்ணம் அவளாக காட்டினால்தான் ஆயிற்று
ஆகவேதான் இங்கு பக்தன் சொல்லுகிறான்

உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அவளை தொழுதுகொள் ; சரணாகதியை
விட்டுவிடாதே ; அவளை வேலை வாங்கினால் ஆரம்பத்தில் செய்வாள் ; அந்த
அனுபவத்தை நம்பி ஏவல் செய்யாதே ;
அவளுக்கு அடிமையாகவே இருந்துவிட்டால் ஏழு உலகங்களுக்கும் அதிபதியாகவும் மாற்ற அவளால் முடியும்

சூரியன் சந்திரன் குபேரன் இந்திரன் பிரமன் புராரி, முராரி கந்தன், கணபதி,
காமன் முதலான பலவகைப்பட்ட தேவர்களும் பொதியமுனி முதலான சித்தர்களும்
முத்தர்களும்
சாதித்த புண்ணியர் எண்ணிலர்களும் தையலை போற்றித்தான் உயர்ந்தார்களாம்

அதிதேவர் சிவனாருக்கு ஒரு கையில் தீ அக்கினி தேவி வந்து அமர்ந்திருப்பாள் ;
தலையிலோ கங்கை வந்து அமர்ந்திருப்பாள் . அந்த பாவனையில் அடுத்த பெண்களோடு
வந்து பெண் கேட்டால் அன்னை ஒத்துக்காமலும் போய்விடுவலல்லவா
அவைகள்
இருந்தாலும் இல்லாததுபோல பொய்யை உண்டுபண்ணிக்கொண்டு சாதாரண மனிதனைப்போல
உமையோடு மகிழ்ந்திருக்க தைமாதத்தில் அன்னையின் அடிகளில் சங்கரனார் வந்து
மலர்சொரிந்து மயக்கினாராம் .
பக்தி சாதனத்திற்கு பல சிறப்புகள் உள்ளன . அது எளிதாக திட்டலாம் என்பதுதான்

இங்கு பக்தன் அன்னையை குழந்தையாக பாவித்து திட்டத்தொடங்குகிறான் .
உண்மையான அன்புடைய பக்தர்களின் நெஞ்சத்தை தவிர ஆசா பாசம் உள்ள பொய்யர்களின்
அன்பை ஒதுக்கத்தெரியாத முட்டாளே . யார் அன்பு காட்டினாலும் ஓடுகிறாயே
தராதரம் பார்க்கத்தெரியாதவளே
ஆனாலும் அப்படி பொய்யை நம்பி ஏமாறுகிற
உன் புத்தியும் நல்லதாக போய்விட்டது . சங்கரனாரின் பொய்யை நம்பி அவரை
சந்தோசமாக ஏற்றுக்கொண்டாய்
எழிலும் நீரோடைகளும் நிரம்பிய கானகத்தில்
குயிலோசையைப்போலும் அதுகேட்டு ஆடும் மயிலைப்போலும் ஒயிலாக பூமியில் வந்து
வந்து உதித்தவள் புவனேஸ்வரி
கலியுகத்தை அழிவுக்கு தப்புவிப்பவள்
தன் சமாதான உக்தியால் இறைபேரரசுக்கும் கலியுக பூமிக்கும் மோதலை தவிர்ப்பவள்
அழிவுக்கு அதிபதியான சிவனுக்கு அன்னையை பரிசாக கொடுத்து பூமியின் ஞானிகள் பக்தர்கள் ஆன இமவான்கள் நல்லினக்கப்படுத்திக்கொண்டார்களாம்
கனங்குழை

ஆணுக்கு அழகு கெளரவம் அந்தஸ்து எல்லாம் அவனுக்கு அருகில் இருக்கும் அவனின்
மனைவியின் அலங்காரத்தால் ஆடை அணிகலன்களால் வெளிப்படையாகும்
அப்படித்தான் ஆரம்பகால மனிதர்கள் மனைவியை அடையாளப்படுத்தி மதிப்போடு நடத்தி வந்தார்கள்
ராஜசபையில் ராணி சர்வலங்கார ரூபிணியாக சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பாள்
ராஜா அலுவல் பார்த்துக்கொண்டிருப்பார் . ராணிக்கு வேலையே இல்லாவிட்டாலும் தர்பாரில் சேவை சாதிப்பாள்
தனக்கென தனி நிதி வைத்துக்கொண்டு கோவில் குளங்களை செப்பம் செய்து திருப்பணி செய்துகொண்டே இருந்தார்கள்
பெண்களை மதிக்காத குடும்பமும் உறுப்படாது ; நாடும் உறுப்படாது
உக்கிரம் அடங்காத காளியை அவளின் பொற்பாதங்களை தன் நெஞ்சிலே ஏற்று அய்யன் சாந்தப்படுத்தவில்லையா ?

மனிமகுடத்தோடு காதை தழுவிய குழை அதிலிருந்து பாதம் வரை வழியும் கொன்றை
மலர் மாலைகள் திருக்கைகள் நெடுந்தோழ் ; புன்னகை ததும்பும் கருணை முகம் ;
கரும்பு வில் ; பலவகையில் மாறுபடும் வல்லமை உள்ள அம்பு போன்ற பார்வையுள்ள
திருக்கண்களும் சுட்டெரிக்கும் மூன்றாவது கண்ணும் உடைய நின் அழகிய திருமேனி
எப்போதும் என் நெஞ்சில் உதிக்கட்டும்
பக்தன் தன்னில் எதை ரசித்தானோ அந்த குழையையே அவிழ்த்து வானில் எரிந்து பெளர்ணமியை போல முழுநிலவு தோற்றத்தை உதிக்கவும் விட்டாள் அவள்
அன்னையால் எதையும் சாதிக்க முடியும் . தன் பக்தர்களை கோழி குஞ்சுகளை காப்பதுபோல காப்பாள்
ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும்
சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.


No comments:

Post a Comment

Abirami Anthathi 1 - 4

தார் தாரகா பூக்கும் கொன்றை மலர்களையும் சண்பக மலர்களால் ஆன மாலைகளையும் விரும்பி அணியும் தில்லை ஊரார் சிவனின் இடபாகத்தை கைப்பற்றிக்க...